செவ்வாய், 19 ஜனவரி, 2021

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

maalaimalar : சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புதுடெல்லி:டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  * புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.

பின்னர் சசிகலா தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.

* சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை.

* ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை.

*  சசிகலாவுடன் இருந்த பெரும்பாலோனார் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக