சனி, 2 ஜனவரி, 2021

முதலிரவு அந்தரங்கத்தை சமூக ஊடங்களில் லீக் செய்த கணவர் ... திருப்பதி கோயில் உதவி நிர்வாகி

Hemavandhana - tamil.oneindia.com : ஹைதராபாத்: சொந்த மனைவியை ஒருத்தர் விபச்சாரியாக மாற்றிவிட்டார்.. தங்களது பெட்ரூமில் நடந்த அத்தனை அந்தரங்க வீடியோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. 

இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்தது திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர் என்பதுதான் பெருத்த அதிர்ச்சியே! ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்த்து வருபவர் ரேவந்த்.. இங்கு ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்கிறார்..                         இவரது மனைவி பெயர் நிரோஷா.. திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பள்ளியை சேர்ந்தவர். நிரோஷாவை லவ் பண்ணியே ரேவந்த் 4 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்தார்..                          இரு வீட்டு பெற்றோரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதமும் தந்திருந்தனர்.. நிரோஷாவின் பெற்றோர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வரதட்சணையாக ரேவந்த்துக்கு தந்தனர். கல்யாணம் ஆகி ஒரு மாசம்தான் இவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.. 

 அதற்குள் ரேவந்   வரதட்சணை இன்னும் வரதட்சணை வேண்டும் என்று நிரோஷாவை தொல்லை தர ஆரம்பித்தார்.. இப்போதானே கல்யாணம் முடிந்தது.. அந்த செலவே இன்னும் இருக்கிறது, மெதுவாக வீட்டில் கேட்டு வாங்கி தருகிறேன் என்று சொல்லி உள்ளார்.. ஆனாலும் ரேவந்த் விடவில்லை.. உடனே வரதட்சணை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.. தொடர்ந்து தன் கோரிக்கையை நிரோஷா மறுக்கவும், அவரை பழிவாங்க முடிவு செய்தார்.



அந்தரங்கம் அதற்காக மனைவியுடன் தான் அந்தரங்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார்.. அதில் நிரோஷாவை விபச்சாரி என்று கேப்ஷன் போட்டிருந்தார். மேலும் அவரது செல்போன் நம்பரையும் அதில் குறிப்பிட்டு விட்டார். இளம்பெண் நிரோஷாவை பார்த்ததும், ஏகப்பட்ட பேர் போன் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. அசிங்க அசிங்கமாக பேச தொடங்கினர்.. இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த நிரோஷா ரேவந்த் மீது ஸ்டேஷனில் புகார் தந்தார்.

கைது இதனிடையே இந்த தகவல் திருப்பதி எஸ்பி ரமேஷ் ரெட்டிக்கே தெரிந்துவிட்டது.. அதனால் அவர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, திருப்பதியில் உள்ள டிசா ஸ்டேஷனில் ரேவந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ரேவந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.. விசாரணையும் நடந்து வருகிறது.. காதல் திருமணம் செய்த பெண்ணை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக கணவனே நடத்திய சம்பவமும், அந்த கணவன் தேவஸ்தானத்தில் வேலை பார்ப்பவர் என்பதும் ஏகப்பட்ட ஷாக்கை தந்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக