சனி, 2 ஜனவரி, 2021

திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் – வைகோ அறிவிப்பு!

  webdunia : வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இரண்டு சீட்களைப் பெற்று போட்டியிட்டு வென்றது. ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. திமுகவில் இருந்த மற்ற சிலக் கட்சிகள் கூட திமுக சின்னத்தில் போட்டியிட்டன. இந்நிலையில் இப்போது சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக