வெள்ளி, 15 ஜனவரி, 2021

சசிகலாவை சாக்கடைக்கு ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தி ! திமுகவை எதிர்க்க சசிகலாவை சேர்த்துக் கொள்ளுங்கள்

thinathanthi : பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார் சென்னை தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார். 

 சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.

 puthiyathalaimurai : சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்து கொண்டு பேசவுள்ளார். nt இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் செளரி கூறியிருந்தார். அவர் சொன்னது போல், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக