tamil.news18.com : கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து நலமுடன் இருப்பதால் அவரை
நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு
விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சில
நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம்
அறிவுறுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா,
கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.
உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இன்றுடன்
சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி
ஏதும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக