வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஓசூர் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

maalaimalar : ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
தனியார் நிதி நிறுவனத்தில் போலீசார் விசாரணை
ஓசூர்: ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக மேலாளர் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக