ஞாயிறு, 17 ஜனவரி, 2021

40 ராணுவ வீரர்கள் உயிரை பறித்த புல்வாமா தாக்குதல் பாஜக வெற்றிக்காக அரங்கேற்றப்பட்டது? அர்னாப் கோஸ்வாமின் ஆடியோ லீக் Arnab Goswami’s Explosive Whatsapp ‘leak’

Image may contain: 1 person, text

Kavitha Gurunathan  TRP ஊழல் புகழ் அர்னாப் கோஸ்வாமி யின் 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரத்தை மும்பை போலீஸ் ரிலீஸ் செய்துள்ளது. இந்த வாட்ஸ்அப் உரையாடல்களால் பாஜக மற்றும் அர்னாபின் தேச பக்தி முகமூடி கிழிந்து தொங்குகிறது... பாலகோட் பாகிஸ்தான் தாக்குதல் சென்ற தேர்தலை எப்படி மாற்றி அமைத்தது என்று அனைவரும் அறிவோம். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அர்னாப்க்கு அது தெரிந்து அவர் அது பற்றிய தகவல்களைப் பரிமாறி உள்ளார்.
'இதன் மூலம் பா.ஜ.க தேர்தலை இலகுவாக வெல்லும், அந்தத் தாக்குதலை உடனடியாக ஊதிப் பரப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் எழுதி இருக்கிறார்.'
40 ராணுவ வீரர்கள் உயிரைப் பறித்த புல்வாமா தாக்குதலை மோடிக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போவதாக கூறுகிறான்..
பாலகோட் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடக்கப் போவது 3 நாட்கள் முன்னதாகவே இவனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் அரட்டை ஒளிபரப்புப் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ட்விட்டரில் கசிந்த பின்னர், ஒரு மோசமான பகுதி சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது, குடியரசுத் தலைவர் 370 வது பிரிவை முன்கூட்டியே ரத்து செய்வது பற்றி அர்னாப் அறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கசிவின் படி, அர்னாப் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு '50 வலுவான குழுவினரை 'அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு சேனலும் செய்திகளை உள்ளடக்கிய நேரம் குறித்தும் கோஸ்வாமி விவாதித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், டோவல் ஸ்ரீநகருக்குச் செல்வதற்கு முன்னர் அர்னாப் கோஸ்வாமி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பி.எம்.ஓ ஆகியோரைச் சந்தித்தார் என்பதையும் அரட்டை வெளிப்படுத்துகிறது.
இவர்கள் எத்தகைய கேடுகெட்ட மனித குல விரோதிகள் என்பதை நாடு இப்போதாவது அறிந்து கொள்ளும் .
ஆட்சிக்கு வர வேண்டுமெனில் , எத்தகைய குண்டுவெடிப்புகளையும் நடத்துவதற்கு பா.ஜ.க.வும் அதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தயாராக இருக்கிறது.! இருந்திருக்கிறது.
குண்டுவெடிப்புகளை நடத்தி அதன் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கின்ற தேசப் பற்றாளர்கிழிந்து தேசபக்தி முகமூடி கிழிந்து தொங்குகிறது.
Kavitha Gurunathan பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக