அப்பொழுது சுற்றியிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக் கைதட்டினர். தொடர்ந்து, இந்த வாரத்தில் மட்டும் மொத்தமே மூன்றுமுறைதான் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மேடையில் பேசியுள்ளார். முதலில் 'இயேசுவைச் சுட்டது கோட்சே' என்று கூறி பகீர் கிளப்பினார். அடுத்ததாக 'திருக்குறளை எழுதியது அவ்வையார்' என்று பேசி மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது 'தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு வீணாகச் செல்லாது, அரசு கஜானாவுக்கே டாஸ்மாக் மூலமாக திரும்பிவரும்' என்று கூறியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் அமைச்சரே இப்படிப் பேசி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள், 4 ஜனவரி, 2021
அமைச்சர் சீனிவாசன் : கொடுக்குற 2,500 ரூபாயும் டாஸ்மாக் வழியாக அரசாங்கத்திற்கே வந்துசேரும்!" - அமைச்சர் பகீர்!
nakkeeran -
- சக்தி :
தமிழகம் முழுவதும் தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் முதல்வரால் துவக்கப்பட்ட மினி கிளினிக் திட்டமும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் துவக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் மினி கிளினிக் துவக்கப்பட்டது. துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசும்போது, "தற்போது தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு 2,500 ரூபாய் கொடுத்தால் மீண்டும் அது டாஸ்மாக் வழியாக அரசாங்க கஜானாவுக்கே வந்துவிடும்" எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக