சனி, 30 ஜனவரி, 2021

டெல்லி 25-28 போராட்ட கால நிகழ்வுகள்.... உள்ளூர் ஆட்கள் என்ற போர்வையில் வலதுசாரி...

Image may contain: 1 person, crowd, sky and outdoor
Prakash JP : · 25-28 போராட்ட கால நிகழ்வுகள். 25 ஜனவரி மாலை - தீப் சித்து கூட்டத்தினர் விவசாய தலைவர்களை எதிர்த்து , அரசு சொல்லும் பாதையில் செல்லக்கூடாது என பேசுகிறார்கள். 26 ஜனவரி காலை - ஒரு கூட்டம் மட்டும் ஒத்துக் கொண்ட பாதியில் இருந்து விலகி வேறு பாதையில் டிராக்டர் ஊர்வலம் செல்கிறது.
26 ஜனவரி காலை - காவல்துறை பாதையை தடுத்து பேருந்தையும் , கனரக வாகனங்களை குறுக்கே நிறுத்துகிறது.
26 ஜனவரி காலை - காவல்துறை புகை குண்டு வீசுகிறது , தடியடி நடத்துகிறது. மோதல் வெடிக்கிறது.
26 ஜனவரி மதியம் - தீப் சிந்து கூட்டம் செங்கோட்டை யில் நுழைகிறது. காலியாக இருந்த கம்பத்தில் சீக்கிய மத கொடியையும் , விவசாயிகள் கொடியையும் ஏற்றுகிறது. காவல்துறை இந்த இடத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
26 ஜனவரி மதியம் - எல்லா முக்கிய காட்சி ஊடகங்களும் சொல்லிவைத்தது போல சோங்கோட்டை பக்கம் கேமராவை திருப்புகிறார்கள். குறிப்பாக பாஜகவுக்கு சாதகமாக பேசக்கூடிய எல்லா ஊடங்களும் திரும்ப திரும்ப சொங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதை ANI யின் feed ஐ மட்டும் ஒளிபரப்புகிறார்கள்.
26 ஜனவரி மதியம் - பாஜக ஆதரவு ஊடகங்கள், IT Cell சீக்கிய கொடியை காலிஸ்தான் கொடி என பரப்புகிறார்கள். இந்திய கொடி இறக்கப்பட்டதாக பொய் பரப்புகிறார்கள்.
26 ஜனவரி மதியம் - விவசாயிகள் கலவரகாரர்கள் , தீவிரவாதிகள் என கட்டமைக்கபடுகிறது.
26 ஜனவரி மதியம் - நடுநிலையாளர்கள் என சொல்லிக் கொள்பவர்களும் , எதிர்கட்சிகள் கூட கலவரத்தை கண்டிகிறார்கள்.
26 ஜனவரி மாலை - முழுக்க முழுக்க விவசாயிகளின் குற்றம் என நிறுவ மொத்த ஊடகமும் வேலை செய்கிறது.
தீப் சிங்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை , கொடி பற்றிய விளக்கம் என எதுவும் பலன் அளிக்கிவில்லை.
27 ஜனவரி காலை - 2 அமைப்புகள் போராட்டை திரும்ப பெறுவதாக அறிவிக்கிறது. அதில் ஒரு தலைவர் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதால் ஒருங்கிணைப்பாளராக இருந்து டிசம்பரில் நீக்கப்பட்டவர்.
27 ஜனவரி - விவசாயிகள் ஜனவரி 26 கலவரத்தால் ஊற்சாகம் இழந்து ஊர் திரும்புகிறார்கள், விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது என பரப்புகிறது.
27 ஜனவரி மாலை - போராட்டம் திரும்ப பெறப்பட்டவில்லை என போராட்ட குழு அறிவிப்பு.
27-28 , பல்வேறு விவசாய தலைவர்கள் மீது வழக்கு பதிவு.
28 ஜனவரி -
உள்ளூர் ஆட்கள் என்ற போர்வையில் வலதுசாரி அமைப்பு , விவசாயிகள் போராட்டத்தால் தங்களுக்கு இடையாறு இருப்பதாக சொல்லி போராட்டம் நடத்துகிறது.
போராட்டம் பிசுபிசுத்தது என ஊடகம் பரப்புகிறது.
சங்கிகள் , 1984 போல சீக்கியர்களை கொல்ல வேண்டும் என்கிறார்கள்.
உ.பி அரசு விவசாயிகள் போராட்ட இடத்தை காலி செய்ய உத்தரவிடுகிறது.
இரவு :
மின்சாரம் துண்டிப்பு
குடிநீர் துண்டிப்பு
பெரிய அளவில் காவல்துறை குவிப்பு
ஊடகங்கள் போராடும் விவசாயிகள் கூடாரத்தை காலி செய்கிறார்கள் என பரப்புகிறது.
சங்கிகள் யோகியின் இந்த நடவடிக்கையை புகழ்கிறார்கள்.
போராட்ட தலைவர் - இங்கேயே பட்டினி கிடந்து சாவானே அல்லாமல் போராட்டத்தை விலக்கமாட்டேன் என பேட்டியில் அழுகிறார்.
அதை கிண்டல் செய்து களமாடுகிறார்கள் சங்கிகள்.
இங்கேதான் டிவிஸ்ட் ,
காவல்துறை குவிப்பு , மின்சார துண்டிப்பு , போராட்ட தலைவரின் பேட்டியை பார்த்து கொதித்து கோவில்களில் , மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு போராட்ட அழைப்புவிடுப்படுகிறது. ஹரியானா, உபி , ராஜஸ்தான் , பஞ்சாப்பில் இருந்து சாரை சாரையாக மக்கள் டெல்லிக்கு புறப்படுகிறார்கள்.
உ.பி காவல்துறை பின்வாங்கி புறப்படுகிறது.
மின்சார இணைப்பு திரும்ப கொடுக்கப்படுறிது.
டெண்ட் காலி ஆகிறது என சொன்ன ஊடகம் இடத்தை காலி செய்கிறது.
எழுதியவர் : Vignesh Palaniswamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக