ஞாயிறு, 17 ஜனவரி, 2021

நார்வேயில் பைசர் தடுப்பூசி போட்டவர்கள் 23 பேர் உயிரிழப்பு

latest tamil news

dhnalamalar :ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.   ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதியில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிர்ச்சி சம்பவமாக நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும், அவர்கள் தடுப்பூசி பயன்படுத்திய பிறகு காய்ச்சல் போன்ற பிரச்னைகளை சந்தித்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 29 பேருக்கு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்தவும், வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்கவும் நார்வே அரசு அறிவுறுத்தியது. இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு இதுவரை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக