வெள்ளி, 22 ஜனவரி, 2021

10 முதல் 17 அமைச்சர்கள் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க ரெடியாக இருக்காங்க..

Mathivanan Maran - /tamil.oneindia.com : சென்னை: சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதை முன்வைத்து அதிமுக, அமமுக வட்டாரங்களில் சுவாரசியமான கிசுகிசுக்கள்தான் ரெக்கை கட்டி பறக்கின்றன. 

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக, அமமுகவில் நொடிக்கு நொடி என்கிற வகையில் நெருங்கிய வட்டாரங்களிலும் சரி.. சமூக வலைதளங்களிலும் சரி.. ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தனை கிசுகிசுக்களையும் பட்டியலிட்டால் தலை கிறுகிறுத்துவிடும். 

 10 முதல் 17 அமைச்சர்களாம்... சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. 

 எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா. 10 முதல் 17 அமைச்சர்களாம் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு ஓகே சொல்லியாச்சு.. எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா.



முதல்வர்- துணை முதல்வர் அதேபோல் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்; டிடிவியார் துணை முதல்வர்.. இதுதான் டெல்லி விருப்பம். அதனால்தான் அண்ணன் அமைதியாக இருக்கிறார் என்பது அதிமுக- அமமுக இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும் செய்தி. சின்னம்மா ராயப்பேட்டை அலுவலகத்துக்கு போற அன்னைக்கு தெரிந்துவிடும்.. எதிர்க்க துணிவு உள்ளவங்க நேரில் வந்து எதிர்க்கட்டுமே என்கிற உதார் ஒருபக்கம்.

நம்ம எம்.எல்.ஏ.வுமாம் இன்னொரு பக்கம், நம்ம எம்.எல்.ஏ. கூட அவருக்கு போன்போட்டு அந்த அம்மாவோட உடல்நலன் பற்றி விசாரிச்சாராம்.. அப்ப, நம்ம எம்.எல்.ஏ.வும் அணி தாவுறாரோ என சிலரை குறிவைத்து கிளப்பிவிடப்படுகிற கிசுகிசுக்களும் இதில் அடக்கம்.

கிசுகிசுக்களின் படையெடுப்புகள் எந்த பக்கமும் சேராமல் நடப்பதை வேடிக்கை பார்க்கலாம்னு நினைச்சா நம்மை எல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்களே என்கிற அங்கலாய்ப்பில் சில எம்.எல்.ஏக்கள். இன்னும் ஒருவாரத்துக்கு அதாவது சசிகலா வந்து சேரும் வரை எத்தனை வண்டி வண்டியாக கிசுகிசுக்கள் படையெடுக்கப் போகிறதோ? என்பதுதான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக