வியாழன், 10 டிசம்பர், 2020

நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் . சித்ராவின் தாய் குற்றச்சாட்டு

மாலைமலர் : தனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எனது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - சித்ராவின் கணவர் மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
சித்ரா, ஹேம்நாத், சித்ராவின் தாயார்
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.         அப்போது அவர் கூறியதாவது: எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் தைரியமானவர் எனவும் அவர் தெரிவித்தார். சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக