செவ்வாய், 1 டிசம்பர், 2020

முக அழகிரி : நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியே

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்.. வெற்றி திமுகவுக்கே! - அழகிரி பேட்டி |  DMK will win in Sankaran Koil election - Azhagiri | சாதனைகளைச் சொல்லி  வாக்கு கேட்போம் ...

  webdunia :தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.          ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார்.

ஆனால், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என கூறினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும், தனதௌ அரசியல் நிலைப்பாட்டை ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் புதிய கட்சி துவங்குவேனா என போக போக தெரியும் என கூறினார். மேலும், நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியே எனவும் திமுகவில் உங்களுடய மகன் துரை தயாநிதிக்கு ஏதேனும் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கட்சி சார்ப்பில் அழைத்து பேசட்டும் என பதிலளித்தார் முக அழகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக