செவ்வாய், 8 டிசம்பர், 2020

மயிலாப்பூரும் சாத்தான் குளமும் .. பூணூலும் போலீசாரும்


 Kcvan Che
: · சென்னை திருவான்மியூர் போலீசார் வாகன சோதனையில்
ஈடுபட்டிருக்கும் போது திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறமுள்ள சாலையில் ஒரு வோல்ஸ்வேகன் போலோ கார் வேகமாக வந்துள்ளது. அதை ஓட்டி வந்தவர் ஒரு இளம் பெண். அருகில் இன்னொரு ஆண் நண்பர். போக்குவரத்து ஆய்வாளர் காரை நிறுத்தி அவர்களை விசாரித்த போதுதான் அந்த பெண் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. போலீஸ் அவர்களை விசாரிக்க ஆரம்பித்தவுடனே, அந்த பெண் நான் யார் தெரியுமா? என் தந்தை யார் தெரியுமா? எங்கம்மா யார் தெரியுமா? என் பேக்ரவுண்ட் என்ன தெரியுமா? என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார். அந்த பெண்ணின் பெயர் காமினி அய்யர். அவர் சினிமா உதவி இயக்குனராக இருக்கிறாராம். கூட வந்த ஆண் நண்பரின் பெயர் டோட்லா சச்சின் பிரசாத். அவர் மென்பொறியாளர். அந்த பெண்ணின் பெற்றோர்கள் பிரபல மருத்துவர்களாம். அவர் ஒரு பிரபலத்தின் மனைவியின் உறவினராம்.

அதிகார போதையில் மிரட்டிய அந்த பெண் அந்த ஆய்வாளரின் பெயர் மாரியப்பன் என்று அவரது பேட்ஜை பார்த்து தெரிந்து கொண்டபின் அவரது கோபம் தலைக்கேறுகிறது. குடி வெறியோடு சாதி வெறியும் சேர்ந்து கொண்டதால் அவரை பிடித்து தள்ளி எட்டி உதைக்கிறார்.
ஆயினும் போலீஸ் அவர் மீது மது மயக்கத்தில் வாகனம் ஓட்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவர்களை தாக்குதல், ஆபாசமாக பேசுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளார்கள். அதற்குள் பல்வேறு மட்டத்தில் இருந்து சிபாரிசு போன்கால்கள். இருப்பினும் காவல்துறை அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
 
காவிரி பிரச்னைக்காக சென்னை ஐபிஎல் கிரிக்கெட் நடப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய போது ஒரு சிலர் தங்களை தடுத்த காவல்துறையினரிடம் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அந்த பிரபலம் இப்போது எங்கே? இதற்கு குரல் கொடுப்பாரா? தனக்கு வேண்டியவர்கள் தவறு செய்ததால் மூடி மறைப்பாரா? இன்னும் முளைக்காதப்பவே இப்படின்னா...
சிஸ்டத்தை மாத்தறது அப்புறம். முதல்ல உங்க ஆளுங்களோட கேரக்டரை மாத்துங்கடா...
பின்குறிப்பு: சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் சுற்றியதை கண்டித்தை போலவே இதையும் கண்டிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக