திங்கள், 14 டிசம்பர், 2020

சாதிய ஒழிக்க அதை தவறுன்னு புரிய வைப்பது மட்டுமே தீர்வு..கேலியோ கிண்டலோ எதிர் மறை விளைவை தான் தரும்.

 

Devi Somasundaram : · நேற்றைய நீயா நானாவும் இணைய அரசியலும்.. நீயா நானால சாதி அரசியல் அல்லது ஆண்ட பரம்பரை அரசியல் பேசப்பட்டதை ஒட்டி சமூக வலைதளத்தில் எழுந்த எதிர் வினைகள் கண்ணில் பட்டது . பலர் அந்த சாதி பெருமை பேசும் இளைஞர்களை கிண்டல் செய்தும் , நக்கல் அடித்தும் பதிவுகளை பார்த்தேன் . சாதி பெருமை பேசுவது பாராட்டப்பட வேண்டியது இல்லை என்பது போல் ஒரேடியா கேலி கிண்டல் செய்வது எதிர் மறை விளைவை தான் தரும். அந்த பையனின் அறியாமையை தான் கேலி செய்தோம் என்பதை மறந்து விடக் கூடாது. அறியாமையை கேலி செய்வதும் பார்ப்பனியம் தான். அந்த பையனுக்கு சரியா சொல்லித் தராத தவறை செய்ததும் நாம் தான் என்பதை மறந்து விடக் கூடாது. நாம் தவறிய இடத்தை பார்ப்பனியம் பயன்படுத்திக் கொண்டது .அங்கீகாரம் என்பது எல்லா மனித மன விழைவு தான் .அது ஆண் பெண்ணால் அங்கீகரிக்கப்படுவதோ , எழுத்தாளன் வாச்கனால் அங்கீகரிக்கப்படுவதோ, நடிகர் ரசிகரால் அங்கீகரிக்கப் படுவதோ ..பக்தன் கடவுளால் அஙகீகரிக்கப்படுவதோ ..தினம் அந்த கட்டமைக்கப்பட்ட வாழ்தலின் அர்த்தத்தை தேடி தான் ஓடிக் கொண்டு இருக்கின்றோம் .

அப்ப நீ ராஜா பரம்பரைன்னு ஒருத்தர் அங்கீகரிக்கும் போதே பொய்யாகவே இருந்தாலும் அந்த பக்கம் சாயவே விரும்புவார்கள் ..அவர்களை கேலி செய்வதால் அவர்கள் அந்த பொய்யை உணரவோ அதில் இருந்து வெளிவரவோ வாய்ப்பில்லை..மேலும் மேலும் சுய பச்சாதாபத்தால் நம்மீது வெறுப்பு வந்து அவர்களை கொண்டாடும் சாதியின் பக்கமே சாய்வார்க்ள்.
கூட்டமா உட்காந்து கொண்டு அந்த பையன நடந்து காட்ட சொல்லி சிரிப்பதற்கும் ,ஆரியம் நம்மை பார்த்து கேலி செய்து சிரிப்பதற்கும் என்ன வித்தியாசம்...இரண்டுமே அறியாமையை கேலி செய்யும் பார்ப்பனிய மனனிலை தான் .
அதை விட அந்த பையன பக்கத்தில உட்கார்ந்து ராஜாவுக்குன்னு தனி நடை எதும் இல்ல ப்பா ...எல்லாரும் காலால தான் நடக்கனும் .ராஜா மட்டும் தலையாலயா நடக்கப் போறார்.
Vertebral column ல எதாச்சும் புட்டுகுச்சுன்னா ராஜாவுக்கு ராஜா வா இருந்தாலும் தவழ்ந்து தான் போகனும்...நிமிர்ந்து நடக்க ராஜாவா இருக்கனும்னு அவசியம் இல்லை..நெஞ்சில நேர்மையும் ,வலுவான backbone ம் இருந்தா போதும். ..ராஜா சாதின்னு தனி சாதி எதும் இல்லை ..யானை மாலை போட்டுலாம் ராஜா வ தேர்ந்தெடுச்சுன்னு நாம தான் வரலாறு சொல்றோம்..நல்ல வேளை யானைக்கு மூளை கிடையாது .அதனால அதுக்கு சாதியும் தெரியாது ....அது யார தேர்ந்தெடுச்சோ அவனும் ஆண்ட சாதி தான். அவன் ராஜாவா இருக்கும் போதே அவன் சாதிகாரன் அடிமை சாதியா தான் இருந்திருப்பான்...ஏன்னா சாதின்றதே நம் அறிவை நம்பாத அடிமைதனம் தான்...படி ,அறிவ வளர்த்துக்க .அது மட்டும் தான் நிரந்தரமா கூட வரும் . நீயும் யாருக்கும் அடிமை இல்லை. உனக்கும் யாரும் அடிமை இல்லைன்னு சொல்லி தந்தா அது தான் பகுத்தறிவு, அது தான் சமூக நீதி.
அதை விட்டுட்டு அவன் அறியாமையை கேலி செய்வதாலோ ..அவன் வீட்டு பெண்ணையே அவனுக்கு எதிர் நிறுத்தி பேச வைப்பதாலோ அவனை திருத்தவும் முடியாது ..அத்தோடு ஏற்கனவே ஆண் ஆதிக்க உணர்வால் ஊறின போன அவன் இன்னும் பெண் இனத்திற்கு எதிரா தான் மாறுவான்.
எற்கனவே வேற சாதி ஆண்களை காதலிக்கிறாங்கன்ற கோபத்தில் உள்ளவன். இப்ப தன்னை பொது இடத்தில் அவமானப் படுத்துகிறாள்னு மேலும் கோபம் தான் வரும்...அது மேலும் பெண்ணுக்கு எதிரா வன் முறையை தான் உருவாக்கும் . . இதை ஒரு பக்கம் கவனிச்சுட்டே இருக்கும் போதே திடிர்னு சில கோமா பேஷண்ட்க்கு திடிர்ன்னு நினைவு வந்து கள்ளர் , மறவர், படையாச்சிலாம் பலிதரப்பட்ட சாதி, மொல்லியார், புள்ளை மட்டும் சாதிவெறி சாதின்னு க்ளாஸ் எடுக்குறாஙக ...ஒரு நிமிஷம் என்ன டா இது..நேத்தி வரை ஆண்வ கொலைக்கு திமுகா அறிக்கை விட்டுச்சான்னு எழுதிட்டு இருந்தாஙக...நாம எதாச்சும் சொல்லப் போனா நம்மள சூத்திர பெரியாரிஸ்ட்ன்னு வேற திட்டுவாஙக ..
இப்ப என்னடான்னா சூத்திரன் மேல திடிர் பாசத்தில பொஙகுறாங்க ..இவஙக பாச பொங்கல்ல வழுக்கி விழுந்து சூத்திரன்லாம் பி எஸ் பிக்கு ஓட்டு போட்டு தமிழகத்தின் தனிப் பெரும் கட்சியா பி எஸ் பி வந்துடும் போல இருக்கே ..பேசாம திமுக வ விட்டு பி எஸ் பி ல துண்ட போட்டு வச்சுப்பமான்னு ஒரே பதட்டமா போச்சு ..
எனக்கு என்ன டவுட்டுன்னா தமிழ் நாட்ல ஆணவக் கொலையே நடக்கலன்னு சொல்லப் போறாரா ?. இல்லை ஆணவக் கொலைலாம் முதலியார், பிள்ளை சாதி தூண்டுதலால நடந்துச்சுன்னு ,கள்ளர் ,மறவர், படையாச்சிலாம் அப்பாவின்னு சொல்லப் போறாரா? . இல்லை ஆணவக் கொலைலாம் திமுக தான் செய்துச்சுன்னு சொல்லப் போறாரா ? .அனேகமா தேர்ட் ஆப்ஷன் கொஞ்சம் வசதியா இருக்கும் ..ஆதாரமே இல்லாம , நாமளே கூட செய்துட்டு என்ன பழி வேணா திமுக மேல தான போட முடியும்.
சாதி எதிர்ப்பு, அல்லது சாதி ஒழிப்பு என்பது என்னைக்கு என்ன பேமண்ட் தரப்படுதோ அந்த சாதி எதிர்ப்ப பேசுவது இல்லை ...எல்லா சாதியும் எதிர்ப்பது தான் சாதி எதிர்ப்பு ..
சமூக நீதி என்பது யாரோ சில குறிப்பிட்ட வர்க்கத்திற்காக பேசுவது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கி வைக்கப் பார்கிறார்கள் ..அத்தனை பேரின் உரிமைகாக பேசுவது தான் சமூக நீதி .. பெண்ணை ஆண் ஒடுக்கும் இடத்தில் பெண் உரிமை பேசனும் .பட்டியல் சாதி , மற்ற பிற்படுத்தப்பட்ட ,பார்ப்பன சாதியால் ஒடுக்கபடும் இடத்தில் பட்டியல் மக்கள் உரிமை பேசனும்.. பிற்படுத்தப்பட்டவர்கள் மற்ற உயர் ஆரியமில்லாத ,ஆரிய சாதி ஒடுக்கும் இடத்தில் அவர்கள் உரிமை பேசனும்.. ஆரியமில்லாத முற்பட்ட சாதி ஆரியத்தால் ஒடுக்கபடும் போது அவர்கள் உரிமை பேசனும்...ஏன் பிராமணர்களுக்கும் சேர்த்து தான் சமூக நீதி பேசறோம்..பிராமண பெண்கள் விடுதலை மட்டும் இல்லை ..பிராமண ஆண்கள் கிட்ட இந்த நூல நம்பி வாழாதிஙகய்யா ...இத வச்சு பொழைச்சுகலாம்னு நம்பி ஏமாறாதீஙக.. இந்த நூலுக்கு இந்தியால மதிப்பு தர மாதிரி வெளி நாட்டுகாரன் தர மாட்டான் .அவன் திறமைக்கு தான் மதிப்பு தருவான்..படி , அறிவ வளர்த்துக்க ,உழைக்க கத்துக்க ..அப்ப தான் பொழைக்கலாம் ..நாளைக்கே ஹிட்லர் மாதிரி ஒருத்தன் வந்தா இப்டி தனியா நின்னா உங்கள அழிச்சுடுவான்...பொது சமூகத்தோட சேர்ந்து வாழ கத்துக்கங்க ய்யான்னு தான் சொல்றோம். நீயும் வாழு ,எல்லாரையும் வாழ விடுன்னு தான் சொல்றோம் .
ஆக .ஒரு தனி அஜண்டாவோட பேசும் எதும் பகுத்தறிவு இல்லை.சமூக நீதியும் இல்லை. கேலி கிண்டலும் பகுத்தறிவில்லை ...சரி அப்ப பாதிக்கப்பட்டவன் பேசக் கூடாதான்னு கேள்வி வரும் ..பாதிக்கப் பட்டவர்கள் அட்லிஸ்ட் கேலி கிண்டலா கூட தன் எதிர்ப்ப தெரிவிக்கக் கூடாது என்பதும் பாஸிஸமே ...
பாதிக்கப்பட்டவர் கோபத்தின் நியாயத்தை மறுப்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது.. அந்த வகைல அவர்கள் கோபம் பகுத்த்றிவு பேசும் மற்ற சாதியினர் மேலும் வரத்தான் செய்யும்...அது அவ நம்பிக்கையின் வெளிப்பாடு . திராவிட வாதிகளுக்கு முற்போக்கு பேசும் பார்ப்பனர் மேல் இருககும் சந்தேகம் போல், பெண்ணுரிமை பேசும் ஆண் மேல் பெண்ணுக்கு இருக்கும் சந்தேகம் போல் , முற்போக்கு பேசும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் மேல் பட்டியலினத்தவர்க்கு ஒரு சந்தேகம் இருக்கத்தான் ...அது நேரடி பாதிப்பு ஊர்த் தெருல இருந்தே வரும் உடனடி எதிர் வினையின் தாக்கம்....அதை தவறுன்னு சொல்ல முடியாது...அதையும் புரிஞ்சுகிட்டு சாதி மறுப்பு பேசுவது தான் சமூக நீதி .
சரி....இப்ப ஏன் திடிர்னு இடைசாதி மேல தலித்தியவாதிகளுக்கு அக்கறை...அது வேற ஒன்னும் இல்ல ...தமிழ் நாட்ல யாருகாச்சும் வாய்வு தொல்லைனாலும் திமுக பெருங்காயம் விக்கல அதான் வாய்வு தொல்லைன்னு பேசனும்.. தமிழகம் திராவிடம்னு ஒரே இன்மா ஒற்றுமையா ஆகி பலமா ஆகிட கூடாது...சாதியா குறுங் குழுக்களா பிரிஞ்சி ஒருத்தர் ஒருத்தர் அடிச்சுகிட்டு அவர்கள் அழிந்து போகனும் என்ற ஆரிய அஜண்டாவ நிறைவேற்ற இவர்கள் ஒரு அம்பு. அதான் நேற்று வரை நடந்த சில ஆணவக் கொலைகளை ஒட்டு மொத்த சமூகத்தின் குற்றம்னு நிறுவியவர்கள் இன்று அந்த சாதிகள் பலிதரப்பட்ட சாதிகள்னு பாசமா மாறிட்டாஙக .்இதன் மூலம் இடைசாதி ஓட்ட திமுக வுக்கு விழுந்துடாம பிரிக்கனும்..அதான் அஜண்டா ...இவர்கள் சாதி ய பேசிட்டு திமுக சாதி அரசியல் செய்யுதுனும் பேசும் போது தான் சிரிப்பு பொத்துக்கும்..
சாதிய ஒழிக்க அதை தவறுன்னு புரிய வைப்பது மட்டுமே தீர்வு..கேலியோ கிண்டலோ எதிர் மறை விளைவை தான் தரும்.
பி கு...இதுல எதும் விமர்சனம் இருந்து விளக்கம் கேட்டா எங்க டேக் செய்தாலும் பதில் சொல்ல தயாரா இருக்கேன்..அல்லது என் கருத்து தவறுன்னு விளக்கம் தந்தாலும் ஏற்க தயாராய் உள்ளேன்...நான் சொன்னது தான் சரின்னு சொல்ல நான் தயாரா இல்லை...அத விட்டு இடைல சின்ன சின்ன பிட்ட ஸ்கிரின் ஷாட் போட்டு கேலி பண்ணிட்டோம் இல்லன்னா மாட்டிகிட்டியா டைப் காமடிலாம் சிரிச்சு வச்சுட்டு போய்ட்டே இருப்பேன்...ஸ்மைலி போட கூட டைம் இல்லாம் வேலை கிழியுதுன்றது வேற விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக