Murugan Sivalingam : ·
சாஸ்திரி...சிறிமா வதைப் படலம்..!
(பழையன நினைத்தல்- 2) : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி¸ குன்னூர்¸ ஊட்டி ஆகிய இடங்களில் புனர்வாழ்வில் சென்று குடியேறிய நமது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அறிந்துக் கொள்வதற்காக எனது நண்பர்களின் வீட்டில் கடந்த 2002 ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வாரக்காலம் தங்கியிருந்தேன். அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை அடுத்து வரும் பதிவில் அறியத் தரவுள்ளேன்..
நீலகிரி மாவட்டத்தை களமாகக்கொண்டு புனர் வாழ்வில் வந்த தாயகம் திரும்பிய இலங்கை மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி பல ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிதல் அவசியமாகின்றது.
01)வரிசைப்படி எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் ( Alienated everywhere) என்ற ஆய்வு நூலை கொடைக் கானல் சிராக் அமைப்பு ) (Ceylon Repatriate Association - Kodaikanal)1984ஆண்டில் வெளியிட்டது.
இந்த நூலின் ஆய்வு குழுவினர்களைக் கீழ் வருமாறு காணலாம். எஸ்.பன்னீர் செல்வம் (இலங்கை மலையக எழுத்தாளர்;;¸ தனது “இலவு காத்தக் கிளி” சிறு கதைக்கு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் பரிசு கிடைத்தது. சமீப காலத்தில் சூரியகாந்தி மலையகப் பதிப்பில் “தேயிலைப் புக்கள்” என்ற தொடர் காவியத்தை எழுதியவர் அகதிகள் தெரு..ஜென்ம பூமி ..திறந்தே கிடக்கும் வீடு…ஒரு சாலையின் சரிதம்.. விரல்கள் போன்ற படைப்புக்களை தந்தவர்… உணர்வுமிக்க சமூகவாதி.. கண்டி மாவட்டம் ரங்கல்ல தோட்டத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு நாங்கள் நடத்திய மலையக இலக்கிய விழாவில் பங்குகொண்டவர். தற்போது மதுரையில் வசிக்கிறார்.) ¸ பி.எஸ்.நாதன்¸ ஏ.சிவானந்தன் (கவிஞர்.. சென்று வருகிறேன் ஜென்ம பூமியே.. டீ.எஸ்.ராஜூ நுவரெலியா சிக்கன் ராஜூ.- சிவா சாந்த குமார் - உருசுலா நாதன் - குணசீலி - அந்தோனியம்மாள். ஆலோசகர்கள் :- ஸ்டான் லூர்துசாமி - எஸ்.செபஸ்டியன் ஆகியோராவர்.
(2) அடுத்து.. புனர் வாழ்வு பற்றிய தகவல் புத்தகம்
( The Directory of Rehabilitation)) இந்நூலை தாயகம் திரும்பியோரின் புனர்வாழ்வு ஆய்வுத் தகவல் நிலையம் ( The Repatriates Rehabilitation Research and Information Centre )) 1989ல் வெளியிட்டது. இர.சிவலிங்கம் இதன் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். இவரது மாணவரான திரு.மெய்யன் வாமதேவன் மூன்றாண்டு காலம் தமிழகத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தபோது தமிழகம் தழுவிய பெரிதளவிலான தகவல்களைத் திரட்டி இந்நூல் உருவாகுவதற்கு காரணமாகவிருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
(3) “தமிழ் நாட்டில் தாயகம் திரும்பிய இலங்கையர்” (புனர்வாழ்வும் ஒருமைப்பாடும்) ( Sri Lankan Repatriates in Tamil Nadu.....Rehabilitation and Integration ) இந்த ஆய்வு நூலை 1989ல் மெய்யன் வாமதேவன் வெளியிட்டுள்ளார். மனவுணர்வைக் கிளறும் தொழிலாளரின் ரேங்குப்பெட்டி…( TRUNK BOX) படத்தை முகப்பட்டையில் போடும்படி மு.நித்தியானந்தன் கேட்டுக்கொண்டு… படத்தையும் தேடிக் கொடுத்ததாக ஓர் சுவாரஷ்ய சம்பவமாக வாமு என்னிடம் கூறினார்.! இவர் பல அமைச்சுக்களில் செயலாளராக பணி புரிந்தவர். திட்டமிடல் அமைச்சில் பணிப்பாளராகவும் இருந்தவர்.
(4) “கோத்தக்கிரியில் தாயகம் திரும்பிய
இலங்கையரின் சமூகப் பொருளாதாரம் பற்றிய பார்வை”( Socio- Economic Profile of Sri Lankan Repatriates in Kotagiri) இந்த நூலை கலாநிதி எல்.வேதவள்ளி எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்திலும் வந்து ஒரு கிராமத்தைப் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
1994 ம் ஆண்டு புது டெல்லியில் கொனார்க் வெளியீட்டாரால் இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு Indian Council of Social Science Research (ICSSR) நிதி உதவி செய்துள்ளனர். ஆசிரியர் வேத வள்ளி இந் நூலை “உலகெங்கும் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்காக” என்று சமர்ப்பணம் செய்துள்ளார். இந் நூலின் சில பக்கங்களில் உணர்வைத் தட்டியெழுப்பும் வார்த்தைகளையும் எழுதியுள்ளார். “இப் புத்தகம் மனிதனின் பரினாம வளர்ச்சியை எழுதுபவருக்கோ¸ சமுதாய வாழ்வியலை எழுதுபவருக்கோ அல்லாமல்¸ உலகில் “வேரறுக்கப்பட்ட சமூகங்கள்” ( uprooted communities) பற்றி அறிந்துக் கொள்ள ஆசைப்படுவோருக்கும் இந் நூல் பெரிதும் உதவும் என்றும் கூறுகின்றார். தனது ஆய்வு நூல் கோத்தகிரி மக்களின் ஆதரவும்¸ அன்பும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போயிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று நன்றியுணர்வைத் தெரிவித்துள்ளார்.
(5) “ In the Service of the Displaced” "Indo Sri lanka Agreement 1964...Indo Sri lanka Agreement 1974"
புலம்பெயர்ந்த மக்கள் பணியில்… என்ற இந்நூலை இர.சிவலிங்கம் எழுதி 1995 ல் வெளியிட்டுள்ளார். “இந்நூலை மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தை உருவாக்குவதற்கு உழைத்த நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு சமர்ப்பணம்” செய்துள்ளார். இப்புத்தகத்தில் பல காரணங்களைக் காட்டி மனித இனத்தை அவர்கள் வாழும் நாட்டில் வாழ விடாமல் அகற்றுதல்.. அகதிகளாக்குதல் .. நிர்க்கதியாக்குதல் போன்ற மனிதக் கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்காமை.. பெருந்துயரமானது என்று விவரித்துச் செல்கின்றார்…
இந்த நூற்றாண்டில் மலையகத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த துயர் பற்றி பல சமூகஜீவிகள் தங்கள் வாழ்நாட்களை தியாகம் செய்து இவ்வாறான எத்தனையோ ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர். துரதிஷ்டவசமாக பெரும்பாலான புத்தகங்களெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. .! அவை அத்தனையும் வெறும் ஆவணங்களாகவே அடங்கிப் போய்விட்டன..!. அதன் பயன்களும் தாக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் சுபிட்சத்துக்காண மாறுதல்களை இன்றுவரை உருவாக்கவில்லை….! இருந்தபோதிலும் நாளைய தலைமுறையினர்களின் தகவலுக்காகவும்.. அவர்கள் எழுச்சிக்கொள்ளும் சமூகமாற்றத்துக்காகவும் இந்த படைப்புக்கள் நிச்சயம் துணை செய்யும் என்பது நமது நம்பிக்கையாகும் (தொடரும்
நல்ல ஆய்வு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு