சனி, 5 டிசம்பர், 2020

ரஜினி போன்ற கருப்புப்பண முதலை களுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக் கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

Gauthaman Munusamy : நேர்மையானவர், ஊழல் ஆற்ற ஆட்சி தருவார், ஒளித்துப் பேசத் தெரியாதவர், கள்ளங்கபடற்றவர் என்று பிம்பம் அமைக்கப்டுகிறார் ரஜினி. இந்த சின்ன வழக்கைப் பார்க்கலாம் ரஜினி போன்ற கருப்புப்பண முதலை களுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக் கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2014ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய் யப்பட்ட வழக்கு, 6 ஆண்டுகளாக நீதி மன்றத்தில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை!! வழக்கு எண் TCA 256/2014 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது
2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்க ளில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக் குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண் டாம் என்று அறிவிக்கிறது
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வரு மான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.
6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந் தது இதற்காகத்தான்.வழக்கு ஏன் தொடுக்கப்பட்டது என்று பார்ப்போம்.
2005ஆம் ஆண்டு ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் நடந்த சோதனையில், ரஜினி கொடுத்த வாக்குமூலத்தின் படி, அவருக்கு 2001, 2002, 2003 ஆண்டுகளில் தொழில் தொடர்பாக ஆன செலவு முறையே 40 இலட்சம், 39 இலட்சம், 36 இலட்சம்.
ஆனால் அந்த செலவுகள் அனைத்தும் அவரது வீட்டுக்கு ஆன செலவுகள்!
வீட்டின் மின்சார கட்டணம், பழுது பார்த்த செலவுகள், தொலைபேசி கட்டணம், செக்யூரிட்டி சம்பளம் என்று சொந்த செலவுகள் அனைத்தையும் professional expenses என்று கணக்கு காட்டியிருக் கிறார்.
இவை அனைத்தும் அரசு ஆவணத்தில் இருப்பவை.
சொந்த காரணங்களுக்காக தான் செய்த பிரயாண செலவுகள், ஓட்டல் செலவுகள் என்று அனைத்தையும் அந்த professional expenses கணக்கில் எழுதி வைத்திருக்கி றார்.
இதன் மூலம் 60 இலட்ச ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.
அவரது கணக்குவழக்குகளை கவனித்து வந்தவர், ரஜினி வசமாக சிக்கிக் கொண் டதை உணர்ந்து, "உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், 50-50 போட்டுக்கு வோம்" என்று கூறி, மொத்த செலவில் பாதியை மட்டும் தொழில் முறை செலவு களாக கருதி, அதற்கு ஏற்றாற்போல் வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.
ஒப்புக்கொண்டது போலவே வரியையும் செலுத்தினார்.
ஆனாலும், கையும் களவுமாக மாட்டிய பிறகுதான் வரி செலுத்தினார் என்பதா 'ல், வரி ஏய்ப்பு செய்த அதே அளவு தொகையை (60 இலட்சம்) அபராதமாக விதித்தது வருமான வரித்துறை.
இந்த வழக்குதான் பாஜக அரசால் இப்போது திரும்ப பெறப்பட்டது

 

 

Sivanesan Natesan: 2G வழக்கு தொடர பட்ட போது அந்த துறையில் அதிகாரியாக இருந்தவர் திருச்சியை சேர்ந்த தற்போது பாஜகவில் இருக்கும் ஆச்சார்யா.. விசாரணையின் போதே ஓடியவர்...பத்திரிகை காரர்கள் அவர்களுக்கு தெரிந்த சைபரையெல்லாம் போட்டு ஊழல் என்று எழுதியதை பார்த்து ,அந்த இடத்தில் எதோ கட்டுமானங்கள் தெரிகிறது ஆனால் என்ன கட்டுமானம் தெரியவில்லை ஆனால் அதில் இந்துக்கள் ராமனுக்கு கோயில் கட்டி கொள்ளலாம்' என தீர்ப்பு அளித்த செத்துப்போன உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி வழக்கு பதிவிட பட்டு ராசாவையும் கனிமொழியையும் சிறைக்கு அனுப்பி ஆனால் இவர்கள் காற்றில் வீசிய கத்தி எல்லாம் எடுபடாமல் தானே கூண்டில் ஏறி வாதாடி விடுபட்டவர்களை இன்னும்2G னு பேசுவது அறியாமையின் உச்சம்.

1 கருத்து: