திங்கள், 14 டிசம்பர், 2020

விவசாயிகள் கட்டுப்பாட்டில் சுங்கச் சாவடிகள் ! மத்திய அரசு கடும் அதிர்ச்சி !!

newstm.in : விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஹரியானா மாநிலத்தில், சுங்கச் சாவடிகளை   கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில்  17-வது நாள் போராட்டம் தொடர்கிறது. இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, அடுத்து கட்ட போராட்டத்தை  விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி செலுத்தாமல் பயணிக்கும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். 

ஹரியானா மாநில எல்லையான அம்பாலாவில் உள்ள ஷம்பு சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் கவுண்டர்கள் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணித்து வருகின்றன. இதனால், மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஹரியானா மாநிலம் பஸ்தாரா சுங்கச்சாவடியில் நேற்றுமுதலே சுங்கச்சாவடிகளை விவசாயிகள் கைப்பற்றி விட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இன்றி, இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக