திங்கள், 7 டிசம்பர், 2020

ஹரியான்வி மொழியில் சினிமா மற்றும் பாடல்கள் எதாவது இருக்கிறதா?

அண்மையில் எனது நண்பரின் நிறுவனத்தில் ஒரு வடஇந்திய இளைஞர் பகுதி நேர வேலைக்கு வந்திருந்தார் . பார்ப்பதற்கு பஞ்சாபியர் போல இருந்தார் . நீங்க இந்தியவா பாகிஸ்தான என்று கேட்டேன் . இந்தியா என்றார் . பஞ்சாபியர் என்றால் கொஞ்சம் பஞ்சாப் பிரச்சனை பற்றி வாயை கிளறலாமே என்று தங்களின் தாய் மொழி எது என்று கேட்டேன் . அதற்கு அவர் ஹிந்தி என்றார் .தங்களின் மாநிலம் எதுவென்று கேட்டேன் . ஹரியானா என்றார் . எனக்கு மீண்டும் சந்தேகம் வந்தது / மீண்டும் கேட்டேன் .ஹிந்தியா? ஆமாம் ஹிந்திதான் என்று மீண்டும் கூறினார் .இப்படியாக நான்காவது தடவை கொஞ்சம் அழுத்தமாக கேட்டேன் . உங்கள் உண்மையான தாய்மொழியை கேட்கிறேன் அது ஹிந்தியா என்றேன்.
அப்போதுதான் அவருக்கு உறைத்தது போலும் ஹிந்தி நோ ஹரியான்வி என்றார் .
எனக்கு அவர் கூறியதன் உச்சரிப்பு சரியாக புரியவில்லை மீண்டும் கேட்டேன் ஆமாம் ஹரியான்விதான் எனது தாய் மொழி என்றார் .
அதில் உங்களால் பேசமுடியுமா என்று கேட்டேன் .. வீட்டில் அடிக்கடி பேசுவோம் என்றார்.
உங்கள் தாய்மொழியை இழந்தால் அதன் வரலாறு அதன் கலையை இழந்து விடுவீர்கள் . உதாரணமாக உங்கள் ஹரியான்வி மொழியில் சினிமா மற்றும் பாடல்கள் எதாவது இருக்கிறதா என்று அவரை உசுப்பி விட்டேன் .
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விலாவாரியாக சொல்ல தொடங்கினார்.
அவர் கொஞ்சம் படிப்பு வாசனை உள்ளவர் போல தெரிந்ததால் அரசியலையும் மெதுவாக பேசத்தொடங்கினார் .. அப்புறம் மோடியையும் குஜராத்தையும் வறுத்தெடுத்தார் ..
தென்னிந்திய திரைப்படங்கள் பற்றி எக்கச்சக்கமான தகவல்கள் தெரிந்து வைத்திருந்தார்
பின்பு கூகிளில் தேடிப்பார்த்தேன் ஹரியான்வி மொழி சுமார் ஒன்றரை கோடி பேர்களின் மொழியாம் .பாதிப்பேர் பாகிஸ்தானில் அகப்பட்டு உருதுவோடு கலந்து சுயத்தை இழந்தார்கள்
மீதிப்பேர் ஹிந்தியோடு கலந்து சுயத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்
ஹரியான்வி திரைப்படங்களும் பாடல்களும் தங்கள் சீரிளமை எல்லாவற்றையும் எப்போதோ பறிகொடுத்து எல்லாம் மறந்து காய்ந்து கொண்டிருக்கிறது .
மக்களே நீங்கள் வடஇந்தியரையும் பாகிஸ்தானியரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் தாய் மொழி எதுவென்று கொஞ்சம் கேட்டு பாருங்கள் .
இது அவர்களின் தாய்மொழிகளுக்கு நாம் செய்யும் அரியசேவையாகும்
ஹரியான்வி போல ஏராளமான வடஇந்திய மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன .மைதிலி போஜ்பூரி என்று உள்ள பல மொழிகளை எல்லாம் ஒரே கூடைக்குள் போட்டு எல்லாமே ஹிந்தி என்று நிறுவ முற்படும் களவாணித்தனம் நடக்கிறது .
ஒரு மொழி அழிவது மனித குலத்தின் ஒரு வரலாறு அழிகிறது என்று பொருள் .
யாதும் ஊரே யாவரும் கேளீர்.. தூங்கும் எங்கள் கேளீர்களின் சிந்தையை கிளறுங்கள்.
ஆதிக்க ஹிந்தி பேயையும் அதனோடு இரட்டை பிறவி எடுத்திருக்கும் உருது பேயையும் ஓட ஓட விரட்டவேண்டியாய் தருணமிதே!
(2012 நாடாளுமன்றத்தில் ஹரியான்வி மொழி பற்றி தீபேந்தர் சிங் ஹூடா அவர்கள் பேசியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக