வியாழன், 3 டிசம்பர், 2020

அறிமுக போட்டியிலேயே அசத்தல்: டி.நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, முக ஸ்டாலின் வாழ்த்து

maalaimalar :ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே அசத்திய டி நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ம ுதலமைச்சர் எடப்படி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91
 #AUSvsIND’’ எனப் பதிவிட்டுள்ளார்.
முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘#TeamIndia கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் 
@Natarajan_91.  அவர்களுக்கு வாழ்த்துகள்!

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக