வெள்ளி, 4 டிசம்பர், 2020

பிரதமரின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி மட்டுமே! போர் முழங்கிய டி ஆர் பாலு திருச்சி சிவா . ஆடிப்போன மோடி

Kandasamy Mariyappan  பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் இந்தியில் பேசுவதை எதிர்த்த திமுக MPக்கள் டி.ஆர். பாலு மற்றும் திருச்சி. சிவா!!!
இன்று, சற்று முன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திரு. நரேந்திர தாமோதரதாஸ் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது!
கூட்டம் தொடங்கியதும், அமைச்சர் பியூஷ்கோயல் இந்தியில் பேசுவதை, திமுக MP டி.ஆர் பாலு அவர்கள் அவருக்கே உரிய பாணியில் உணர்ச்சி வசப்பட்டு, அமைச்சர் ஆங்கிலத்தில் பேச வேண்டும் சத்தம் போட்டார். 
அதை தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசி முடித்தபின் காணொளி கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் நிறைவுரை ஆற்றினார்.
பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் தனது உரையை இந்தியில் நிகழ்த்தும் போது, மற்ற மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் வாய் பொத்தி கிடக்க.....
அண்ணன் திருச்சி சிவா குறுக்கிட்டு அமைச்சர்கள் இந்தியில் பேசுவதை நாங்கள் எதிர்த்த நிலையில் பிரதமரே தனது உரையை இந்தியில் நிகழ்த்துவது, கடுமையான கண்டனத்திற்கு உரியது என கர்ஜித்தார் ...!
பிரதமர் தனது உரையை எங்களுக்கும் புரியும் வண்ணம் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மூலமாக மற்றவர்க்கு புரியும் படி ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என பேசியதை கேட்டு.....
அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ், கொஞ்சமல்ல நிறையவே ஆடிப் போனார்!!!
ஒரு சில நிமிடங்கள் அமைதி காத்து, பிறகு பம்மியபடி உரையை நிகழ்த்தி முடித்தார்.
பேரறிஞர் அண்ணா சொல்வார், இந்தி திணிப்பை ஏதோ முச்சந்தியில் மேடை போட்டு வாய் கிழிய பேசுவதை மட்டும் திமுக செய்யாது! 
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் முகத்தில் அறைந்தாற் போல் எதிர்ப்பை தெரிவிக்க திமுகவால் மட்டுமே முடியும் என கூறினார்!
70 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பற்ற வைத்த நெருப்பு, இன்னும் அதே வெப்பத் தோடு திமுகவிடம் இருப்பதை அண்ணன் டி.ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா அவர்களிடம் காண முடிகிறது..!!
அண்ணன் டி ஆர் பாலு திருச்சி சிவா அவர்களை பாராட்டுவோம்.
பாஜக ஆர் எஸ் எஸ் தனது அடிமை அதிமுக..ரஜினி என பல அயிட்டங்களை வைத்து பல்முனை தாக்குதல் செய்வதின் பிண்ணனி புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக