வியாழன், 17 டிசம்பர், 2020

போலி மசாலா தயாரிப்பு கழுதை சாணம் மூட்டை மூட்டையாக .. உத்தர பிரதேசம்

வடஇந்திய கம்பனிகளின் மசாலாக்களில்தான் கழுத்தை சாணம் அல்லது மாட்டுச்சாணம் கலக்குகிறார்கள் . அல்ல அல்ல.. அவற்றில் இருந்துதான் உற்பத்தியே செய்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன . தமிழ்நாட்டு பிராண்டுகளில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன் . ஆனால் இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது இந்த மசாலா இறக்குமதியை பெரிதும் செய்பவர்கள் வடஇந்திய மார்வாடிகள்தான்.. 

இவர்கள் தங்கள் கழுத்தை மாட்டு சாணத்தின் மீது தமிழ்நாட்டு லேபிள்களை ஒட்டி விற்பனைக்கு விட கூடிய ஆபத்து உள்ளது என்று எண்ணுகிறேன் .  

யவன குமாரன் : மசாலாத்தூளில் கழுதைவிட்டையை கலந்தவன்னு நியூஸ் படிச்சவுடனே...யார்ரா அவன்...உபிக்காரனா...? என நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் தானே...! நானும் அப்படித்தான் நினைச்சேன்...சரி வாங்க விபரம் சொல்றேன்...

ஆளு பெயர் அனூப் வர்ஷன்,2002ல் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்ட "இந்து யுவ வாகினி" அமைப்போட பிரச்சாரகர்,செயலாளர்,பொருளாளர் (மண்டல் சா பிரபாரி-அதாவது மண்டலத்தின் பொறுப்புதாரி) எல்லாமே இந்த ஐய்யா தானாம்.
உபி,நவிப்பூரின் ஹத்ராஸ் நகரத்தில் தான் ஐய்யா தனது கழுதை விட்டை பேக்டரியை ஓட்டியிருக்கிறார்.
கழுதை கழிவோட சேர்த்து,சில உணவுக்குத்தகாத அமிலங்களையும்,நெல்-கோதுமை வைக்கோல்களையும் அரைத்து மசாலா பொடிகளுக்குள் கலந்துவிட்டிருக்கார் அண்ணன்.
தொழிலாளி ஒருத்தனோட சண்டை போல,அவர் நேரா குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசருக்கு தகவல் கொடுக்க, பேக்டரியை போய் பார்த்த ஆபிசருக்கு அதிர்ச்சி, மூட்டை மூட்டையாக கழுதைவிட்டை.சுமார் 300 கிலோ மிளகாப்பொடி,மஞ்சள் பொடி,கரம் மசாலா பொடி மற்றும் கொத்தமல்லிப்பொடியில் மானாவாரியாக அவற்றை கலந்துவிட்டுருப்பதை சீஸ் பண்ணியிருக்கிறார்கள்.அத்தோடு பேக்டரிக்கு சீலும் வைத்தாகிவிட்டது.
CRPC செக்‌ஷன் 151ன் கீழ் ஆளை கைது பண்ணி 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அனூப்,அங்க கஷ்டப்படுவார் தண்டிக்கப்படுவார்னா நினைக்கிறீங்க...அவர் இப்ப எந்த குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலின்னு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டு என்ஜாய் பண்ணிட்டு இருக்காரோ...?
மசாலாப்பொடிகளை வாங்கித்திண்ண மக்கள் தான் பாவம்.இது மாதிரி கருமங்களையெல்லாம் இந்த பாதகர்கள் தவிர வேறாரும் செய்ய முடியாது.இவரோட ஊர்,பெயர் எல்லாம் வெளியே வந்துவிட்டது ஆனால் அந்த கம்பெனியோட பெயர் மட்டும் ஊடகங்களில் வரவில்லை...காரணம் அவர் திரும்ப வந்து அதே பேக்டரியை நடத்தணும்ல...அதுக்குத்தான்.
உள்ளூர்காரன் தவிர மற்ற மக்களுக்கு வருங்காலத்தில் சப்ளை பண்ண வசதியாக இருக்கும்.அந்த ஆளை கைது பண்ணுனது கூட மக்களிடமிருந்து அவரை காப்பாற்றிவிடத்தான்...விபரம் தெரிந்த மக்கள் அடித்தே சாவடிப்பார்களே
.
https://www.indiatimes.com/.../up-hathras-factory-busted...
Parthasarathy CK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக