Paul Benjamin : ·
பாரதி"யார்"?
" ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறான் பாரதி
(ஞான ரதம் பக்.88) //
பாரதி"யார்"? “பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.
நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.
அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார்.
பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.
பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.
பார்ப்பனப் பெண்கள் சாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் பாரதி மிக கவனமாகவே இருந்தார் என்பதுதான் ஓர் செய்தி!
பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை என்பது இதிலுள்ள இன்னொரு செய்தி!
ஆதாரம் : சித்திரபாரதி. - தோழர் தமிழ் மறவன் பதவியிலிருந்து //
பாரதி"யார்"?
‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:
வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி (2)
இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார்.
பாரதி"யார்"?
‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலிலும் பாரதி நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்துகிறார்.
நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன் (3)
என்கிறார்.
பாரதி தமிழகத்தில் வாழ்ந்தாலும் வடவரின் ஆரியக் கலாச்சாரத்தை விரும்பினார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது:
வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால்
மூளும் நற்புண்ணியந்தான் (4)
பாரதி"யார்"?
சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.
“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.” (11)
“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?” (12) – பாரதி
பாரதி"யார்"?
// கடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்:
“ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கி விட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.” (20)
மேற்கண்ட சான்றுகளினால் பாரதிக்கு இளமையில் காசியில் படித்த காலந்தொட்டு கடைசிக்காலம் வரையிலும் பார்ப்பன இன உணர்வு மேலோங்கி இருந்தது என்பதை அறியலாம். //
பாரதி"யார்"?
பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். இக்கதையில் சுப்புசாமி கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்கு காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார். அதற்கு அந்தக் கோனார், ‘நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே எனக்கு இதில் சம்மதம் இல்லை’ என்கிறார். இதைக் கேட்ட கோபால் அய்யங்கார் ‘நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்’ என்கிறார். (15)
இக்கதையின் மூலம் பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார்.
பாரதி"யார்"?
// பாரதி காசுக்கு கவி எழுதினான்
பார்ப்பனர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் பொய்யான போலி பிம்பம் பாரதி //
ஆதாரம்:
1. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.311
2. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.371
3. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.566
4. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.233
5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.83
6. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி, ப.141
7. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.22
8. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.395
9. பாரதியார் கவிதைகள், ப.277
10. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.29
11. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்
12. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394
13. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.458
"பாரதி ஒரு கஞ்சா பேர்வழி. அவன் முஸ்லீம்களை, திக்கைத் தொழும் துலுக்கர்" என்றான்
பதிலளிநீக்குமுஸ்லீம்கள் அல்லாஹ்வைத் தொழுபவர்கள். அவர்கள் திக்கைத் தொழுவது இல்லை என்ற அடிப்படைப் பொது அறிவு கூட இல்லாதவன் பாரதி