செவ்வாய், 1 டிசம்பர், 2020

கனடாவில் பஞ்சாபியர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சிறுபான்மையோர்களாக உள்ளார்கள்

Image may contain: 6 people, beardகனடாவில் பஞ்சாபியர்க்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சிறுபான்மையோர்களாக உள்ளார்கள் . கனடா மத்திய அமைச்சர்களாக பஞ்சாப் சீக்கியர்கள் உள்ளார்கள் . அதுவும் வெறும் சாதா அமைச்சர்கள் அல்ல. கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் மற்றும் விஞான தொழில் துறை அமைச்சர் . பதினெட்டு எம்பிக்கள் உள்ளனர் . மூன்றாவது பெரிய கட்சியின் தலைவராக ஒரு தலைப்பாகை கட்டிய சீக்கியரே உள்ளார் கனடாவின் மாகாண அரசியலிலும் அவர்கள் கணிசமான பொறுப்புக்களில் உள்ளார்கள். தொழில் வர்த்தக துறைகளில் நல்ல நிலையில் உள்ளார்கள் . இவர்களின் குரலை கனடிய அரசு எளிதில் புறந்தள்ளி வீட முடியாது.
வெறுமனே வீதியில் நின்று கோஷம் போடும் நிலையில் இருந்து அதிகார மையத்தில் ஓரளவு செல்வாக்கு மிக்கவர்களாக முன்னேறி உள்ளனர்
பெரும்பான்மையான சீக்கியர்கள் இன்னும் காலிஸ்தான் அபிமானம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் .
ஆனால் வெளியில் அது பற்றி பெரிதாக பேசுவதில்லை .
ஏனெனில் கடந்த காலங்களில் சீக்கிய பயங்கரவாதம் நிகழ்த்திய பல முட்டாள்தனங்களால் கனடிய மக்களிடையே இன்னும் ஒரு சந்தேக கண்கொண்டுதான் பார்க்கப்படுகிறார்கள். 
 
இவற்றில் இருந்து பஞ்சாபியர்கள் பாடம் கற்றுக்கொண்டு மெதுவாக உறுதியாக தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள் போல தெரிகிறது .
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்ட செய்திகள் கனடா பஞ்சாபியர்களிடையே உன்னிப்பாக பார்க்கப்படுகிறது..
அவர்களிடையே பேசப்படுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக