செவ்வாய், 1 டிசம்பர், 2020

இலங்கை சிறையில் கலவரம் 8 கைதிகள் உயிரிழப்பு 50பேர் காயம்.. தொடர்ந்து பதற்றம்

veerakesari :மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் குழப்ப நிலையும் வன்முறைகளும் தொடர்வதாகவும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50பேர் காயமடைந்துள்ளதை பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார்.    சிறைச்சாலையில் வன்முறைகள் ஆரம்பமாகி 12 மணிநேரத்தின் பின்னரும் துப்பாக்கி பிரயோகத்தை கேட்க முடிவதாக அந்த பகுதியில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.    இன்று காலை 7.20க்கு துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலை முன் சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் திரண்டவேளை அவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.   

சிறைச்சாலைக்குள் இருந்து அம்புலன்ஸ்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதை காணமுடிகின்றது.

leader tamil :மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மஹர சிறையிலிருந்து காயமடைடந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறியழுவதையும் சீற்றமடைவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக