செவ்வாய், 10 நவம்பர், 2020

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை live.. Bihar Election Result

tamil.news18.com : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மூன்று கட்டங்களாகளாக நடைபெற்று முடிந்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சாம்பரான், கயா, ஷிவான், பெகுசாரை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் தலா 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைநகர் பாட்னாவில் உள்ள 14 தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரே மையத்திலும், பிற மாவட்டங்களில் 57 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்காக தலா 2 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை, பீகார் காவல்துறை, வெளிமாவட்ட காவல்துறை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாக்கு எண்ணும் மையங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகள், கட்சி முகவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், கிருமிநாசினி பாட்டில்கள், கை கழுவ தேவையான தண்ணீர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் ஓவ்வொரு சுற்று முடிவுகளும் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக