Shankar Ji : ·
கேஷ்லெஸ் டிரான்சாக்ஷன் வந்தால் என்னாகும்?
முதல்ல தேன் தடவி எல்லாம் சுமுகமாத்தான் ஆரம்பிக்கும்.
அப்புறம், ஒவ்வொரு டிரான்சாக்சனுக்கும் ஸ்வைபிங் சார்ஜ், இண்டெர்நெட் சார்ஜ், ப்ரிண்டிங் சார்ஜ், ஹாண்ட்லிங் சார்ஜ், செஸ், சர்வீஸ் டாக்ஸ் மெசின்ல தேய்க்கறதுக்குத் தனியாவும், வாங்கற பொருள்ள இப்ப இருக்கற ஆயிரத்தெட்டு டாக்ஸும் தொடரும்.
அப்புறம் குறிப்பிட்ட வங்கிக் கார்ட குறிப்பிட்ட வங்கி மெசின்ல தேய்க்கலன்னா அதுக்கு தனி சர் சார்ஜ் போடப்படலாம்.
கார்டின் வருடாந்திர கட்டணங்கள் மூன்று மாதத்திற்கொருமுறை என்று மாற்றப்படலாம். கார்ட் ஸ்டேட்மெண்ட் தனிக் காசு. ஏடி எம்மில் பணம் எடுக்க வரைமுறை. காசாக டெப்பாசிட் பண்ணினால் பெனால்டி. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ டி எம்மிமில் மாதம் இருமுறை மட்டுமே காசோ, ஸ்டேட்மெண்ட்டோ பார்க்கமுடியும். வேறு வங்கியில் கார்டை நுழைத்தால் அபராதம்.
ஆன்லைனில் பணம் மாற்றக் கட்டணம், அதற்கும் பலப்பல வரிவிதிப்புகள், கட்டணங்கள்.
கார்ட் தொலைந்து போனால், ஒன்றை அமுக்கி, இரண்டை அமுக்கி ஆப் கா நாம் க்யாஹே என்ற ஹிந்திக் குரலுக்கு கார்ட் தொலைஞ்சி போச்சி தாயி என்று பிச்சை எடுத்து அது ஏற்கப்பட்டதா இல்லையா என்று தெரியாமல் அவதிப்பட்டு.
செக் பரிவர்த்தனைகள் கரண்ட் அக்கவுண்டுக்கு மட்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டு,
என்று வித விதமான உருவல்கள் வரும். சரி தேஷ் நலனுக்காக இதையெல்லாம் நீங்கள் சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவியின் கார்ட் விவரங்கள் திருடப்பட்டு ஆன்லைனில் அவன் பணம் முழுவதும் அடிக்கப்பட்டால், அதற்கான எந்த உத்திரவாதமும், பணத்தைத் திரும்ப அளிக்கும் நடைமுறையும் இல்லாமல் இதை முன்னெடுக்கும் அறிவாளிகள் அந்த அப்பாவியின் பணத்திற்கான உத்திரவாதத்தைப் பற்றிக் கடைசிவரை பேசாமல், ராணுவ வீரர் உயிரையே தொலைக்கிறார் உன் பணம் தொலைந்ததா பெரிசு என்று வியாக்கியானம் பேசி வருவார்கள்.
ஒரு நல்ல விஷயத்தை நாட்டு மக்களுக்குப் பழக்கப்படுத்தி அதில் மெல்ல வரிகளை நுழைத்து அதிலிருந்து மீள முடியாமல் செய்து, அதன் பின் அவன் கேள்வி கேட்கும்பொழுது அவன் அடிமடியில் கை வைத்து அவனை அடங்கச் செய்வதுதானே கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் விற்பனை வரை உங்க டெக்கினிக்கு ஆப்பீஸர்ஸ்?
பொறுப்பை ஏற்க யாருமில்லாமல், திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பேரை மட்டும் பொறித்துக்கொள்ளும் உங்கள்
ப்ராய்லர் பண்ணையில், கோழிகளுக்கு நீங்கள் போடுவதுதானே தீனி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக