புதன், 25 நவம்பர், 2020

ஸ்டாலின் முழக்கம் : நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள்

நான் கலைஞரின் மகன்தான் .இதைவீட எனக்கு வேறு பெருமை தேவை இல்லை . நான் வெறும் இரத்த வாரிசு மட்டுமல்ல .. கொள்கை வாரிசு .. 

முத்தமிழ் அறிஞரின் கொள்கைக்கு கோட்பாட்டுக்கு இலட்சியத்துக்கு வாரிசு நாங்கள் ஆமாம் திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது .தந்தை பெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள் . பேரறிஞர் அண்ணாவினுடைய கொள்கைக்கு வாரிசு நாங்கள் . 

திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள் . நூறாண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகத்தின் விடியலுக்காக சமூக நீதியை நிலைநாட்ட உருவான நீதிக்கட்சிக்கு வாரிசு நாங்கள் . 

நாவலருக்கு பேராசியருக்கு சொல்லின்  செல்வருக்கு புரட்சி கவிஞருக்கு கலைவாணருக்கு சிந்தனை சிற்பிக்கு வாரிசு நாங்கள் . ஸ்டாலின் என்பது எனது தனிப்பட்ட பெயர் அல்ல ஒரு இயக்கத்தின் பெயர் .. நான் மட்டுமல்ல திராவிட முன்னேற கழகத்தில் இருக்கும் யாரும் தனி மனிதர்கள் அல்ல 

நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள் அதனாலதான் அமித் ஷாவுக்கு எங்களை பார்த்தால் கோபம் வருகிறது . இந்த யுத்தம் இன்று நேற்று வந்த யுத்தம் அல்ல .. பல நூறு ஆண்டுகளாக நடக்கிற யுத்தம் . எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது .     மேலும் ஸ்டாலினின் முழு பேச்சையும் காணொலியில் காண்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக