சனி, 28 நவம்பர், 2020

சமணம் ! தமிழுக்கு அதிக இலக்கியங்களை கொடுத்தது ! எல்லாருக்கும் பொதுவான அற ஒழுக்க நூல்களை போதித்த ஒரே சமயம்

Gks Mani : · தமிழுக்கு அதிக இலக்கியங்களை கொடுத்த சமயம் எது விளக்கம் கீழே:- 1)       ஐம்பெருங்காப்பியங்கள்:- சிலப்பதிகாரம் -சமணம் மணிமேகலை - பௌத்தம் சீவகசிந்தாமணி -சமணம் வளையாபதி -சமணம் குண்டலகசி - பௌத்தம் இவ்வாறு தமிழுக்கு ஐஞ்பெருங் காப்பியங்கள் அனைத்தையும் தந்தது சமணமும் பௌத்தமும்.
2)ஐஞ்சிறுங் காப்பியங்கள் :-
சூளாமணி -சமணம்
நீலகேசி -சமணம்
யசோதர காவியம் -சமணம்
உதயண குமார காவியம் -சமணம்
நாக குமார காவியம் -சமணம்
ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்தையும் தந்தது சமண சமயம்.
3) எட்டு தொகை நூல்கள் :-
நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறு நூறு,பதிற்றுப்பத்து,பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புற நானூரு
என்று எட்டு தொகை நூல்கள் அனைத்தையும் தந்தது சமண சமயம்.
4) பத்துப்பாட்டு:-
தமிழில் உள்ள பத்து பாட்டு பின்பே பெயரிடப்பட்டு பல்வேறு காலங்களில் இயற்றப்பட்ட இலக்கியங்களை தொகுத்து பத்து பாடல்கள்களை கொண்டது
பத்து பாடல்களில்
திருமுருகாற்றுப்படை நூலை தவிர
பொருநராற்றுப்படை - சமணம்
சிறுபாணாற்றுப்படை - சமணம்
பெரும்பாணாற்றுபடை - சமணம்
முல்லைப்பாட்டு - சமணம்
மதுரைக்காஞ்சி - சமணம்
நெடுநல்வாடை - சமணம்
குறிஞ்சிப்பாட்டு - சமணம்
பட்டினப்பாலை - சமணம்
மலைபடுகடாம் -சமணம்
இவ்வாறு பத்து பாட்டில் ஒன்பது பெரும் இலக்கியங்களை கொடுத்தது சமணம், இந்த பத்துப்பாட்டிற்க்கு பதிணென் மேற்கணக்கு நூல்கள் என்றும் மற்றொரு பெயர் உள்ளது.
5)இலக்கண நூல்:-
தமிழில் எண்ணற்ற இலக்கண நூல்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் இலக்கியங்களை பகுப்பாய்வு செய்ய தமிழ் இலக்கிய கட்டளைகள் படி எழுதப்பட்டுள்ளதா? இல்லை இலக்கிய தன்மை இல்லது இல்லையா என்று ஆராய பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலே எடுத்து ஆராயப்படுகிறது. அந்த நன்னூல் என்னும் இலக்கண நூலை கொடுத்தது சமண சமயம்.
6) விருத்த நூல்கள்:-
தமிழில் முதன் முதலில் விருத்தப்பாவினால் பாடல்களை எழுதியது சமண சமயம்
நரி விருத்தம்,
களி விருத்தம்,
7)பதிணென் கீழ் கணக்கு நூல்கள்:-
பதிணென் கீழ் கணக்கு நூல்கள் எல்லாம் ஒழுக்கத்தை போதிக்கும் அற நூல்களே
திருக்குறள் - சமணம்
நாலடியார் - சமணம்
நாண்மணிக்கடிகை - சமணம்
இன்னா நாற்பது - சமணம்
இனியவை நாற்பது - சமணம்
கார் நாற்பது - சமணம்
களவழி நாற்பது - சமணம்
ஐந்திணை ஐம்பது - சமணம்
திணை மொழி ஐம்பது - சமணம்
ஐந்திணை எழுபது - சமணம்
திணை மாலை நூற்றைம்பது - சமணம்
திரிகடுகம் - சமணம்
ஆசாரக் கோவை - சமணம்
பழமொழி நானூரு - சமணம்
சிறுபஞ்ச மூலம் - சமணம்
முதுமொழிக்காஞ்சி - சமணம்
ஏலாதி - சமணம்
கைந்நிலை - சமணம்
எந்த சமய மக்களும் எந்த மொழி எந்த சாதி மக்களாயினும் எல்லாருக்கும் பொதுவான அற ஒழுக்க நூல்களை மட்டுமே போதித்த ஒரே சமயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக