சனி, 21 நவம்பர், 2020

மே மாதம் நடந்தது.. பிரபுதேவா - டாக்டர் ஹிமானி திருமணம் உண்மைதான்.. உறுதிப்படுத்தினார் ராஜூ சுந்தரம்!

ரவுடி ரத்தோர்   Raj - tamil.filmibeat.com : சென்னை: பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்று அவர் சகோதரர் ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார். பிரபுதேவா திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.   மணமகள் பிசியோதெரபிஸ்ட் என்றும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவானவர் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். 'இந்து' படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர்,தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரவுடி ரத்தோர் ரவுடி ரத்தோர் இந்தி, தமிழ், தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடித்த போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், தபாங் 3 படங்களை இயக்கியுள்ளார். 

இப்போது சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார். இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத்-தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய்யின் வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. 

இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார், பிரபுதேவா. மதம் மாறினார் மதம் மாறினார் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக, கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், கல்யாணம் வரை சென்ற இந்த காதல், பிறகு முறிந்தது. 2012-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில், பிரபுதேவா பிசியோதெரபி டாக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. 

மும்பையில், பிரபுதேவா நடனம் ஆடியதால் கால் மற்றும் இடுப்பில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி செய்ய வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து சென்னையில், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் பெயர் டாக்டர் ஹிமானி. மும்பை சாக்கி நாக்கா பகுதியில் வசித்து வந்தவர்.திருமணத்துக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். எங்களுக்கு மகிழ்ச்சி

இந்நிலையில், அவர்கள் திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்று பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜூ சுந்தரம் உறுதிப்படுத்தி உள்ளார். 'அது உண்மைதான். பிரபுதேவா திருமணம் செய்துகொன்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக