இன்னும் சரியாக சொல்லப்போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு போலியான வாய்ப்பு கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் பார்ப்பனீய அடிமை மனோபாவம் கொண்டவர்கள்தான் . அருந்ததி ராய் போன்ற பார்ப்பன ஊடக வெளிச்சம் அளவுக்கு மீறி உள்ளவர்கள் எல்லோரும் இந்த ரகம்தான் . மீண்டும் மீண்டும் இந்திய இடதுசாரிகளில் மேல்தட்டு இந்திய இடதுசாரி தலைவர்கள் ஊடக மேதாவிகள் இலக்கிய வாதாபிகள் எல்லோருமே பார்ப்பனீயம் இந்தியாவில் காக்கப்படவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டவர்கள்தான் என்பதற்கு அருந்ததி ராயும் ஒரு அக்மார்க் உதாரணம்தான் .
இவர்கள் எல்லோரும் சேர்ந்து தங்களை நம்பும் அடித்தட்டு மக்களின் போராட்டங்களின் மீது தங்கள் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இருப்பவர்கள் .
போராட்டங்களில் சாதாரண இடதுசாரி தொண்டர்கள் அடிபட்டு சாவார்கள் . மேல்தட்டு இடதுசாரிகள் தொடர்ந்து அதிகாரத்திலும் ஊடக வெளிச்சத்திலும் இருப்பார்கள் ரங்கராஜன் வாசுகி பிருந்தா பிரகாஷ் காரத்துகள் எல்லாம் உயரத்தே இருப்பார்கள். காங்கிரஸ் பாஜக ஆர் எஸ் எஸ் மற்றும் டெல்லி ஊடக ஜாம்பவான்கள் எல்லோரும் இந்த மேல்தட்டு இடதுசாரிகளின் கிளப் விருந்துபசார கூட்டாளிகள்
இங்கே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எல்லாம் தெரிந்த அருந்ததி ராய் சிந்திய விஷம் தோய்ந்த வார்த்தைகளில் சில .. சுயமாக சிந்திக்க கூடிய எவராலும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த 2 ஜி கட்டுக்கதை அருந்ததி ராய் போன்ற அதி புத்திசாலிகளால் புரிந்து கொள்ள முடியாது என்று நான் நம்பமாட்டேன் .
எங்கோ ஒரு தூரத்தே இருந்த எனக்கே இது சுத்த பித்தலாட்டமாக ஆரம்பித்தில் இருந்தே புரிந்தது . இதை ஒவ்வொரு கட்டமாக எப்படி அவர்கள் கட்டமைத்தார்கள் என்பதை நேர்மையும் புத்தியும் உள்ள எவரும் அறிந்திருப்பார்கள் . அருந்ததிக்கு மட்டும் புரியாமல் போனது எப்படி? " பார்ப்பனீய சிந்தனை"
அருந்ததி ராய் : The most scandalous of them was what has come to be known as the ‘2G scam’ in which the government sold telecom spectrum for mobile phones (a public asset) to private companies at ridiculously low prices. The companies went on to sell them at huge profits to other companies, robbing the public exchequer of billions of rupees
மேட்டுக்குடி இடதுசாரி ஊடக வியாபாரிகள் சிலரின் உறவு முறைகள் கொஞ்சம் எட்டி பாருங்க :
CPM பிரகாஷ் காரத்தின் மனைவி பிருந்தா காரத் பொலிட்ப்பீரோ....
பிருந்தா காரத்தின் சகோதரி ராதிகா ராய் NDTV யின் நிறுவனர் .
இவரின் கணவர் பிரணாய் ராய் புகழ் பெற்ற ஊடகவியலாளர் .
பிரணாய் ராயின் தந்தையின் சகோதரியின் மகன் அருந்ததி ராயின் தந்தை
அருந்ததி ராயின் தந்தை ராய் பெங்கால் புகழ் பெற்ற குடும்ப பின்னணி கொண்டவர் . தாய் மலையாள சிரியன் கிறிஸ்தவர் .
பிரணாய் ராயின் தாய் ஐரிஷ் பெண்மணி . தந்தை பி எல் ராய் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் கலெக்டராக இருந்தார்
இது மட்டுமல்ல இவர்களின் சங்கிலி பிணைப்பு இன்னும் நீள்கிறது
மொத்தத்தில் அசல் பூர்ஷுவா குடும்ப பாரம்பரியம் உள்ளவர்கள் .
டெல்லி அரசியலிலும் இந்திய ஊடகங்களிலும் ஆழமான தொடர்புகள் கொண்டவர்கள்
இந்த மேன்மைக்கு உரியவர்கள்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் நாடகத்தில் பாஜக சங்கிகளுக்கு தோளோடு தோளாக தோல் கொடுத்தவர்கள்
இந்திய கம்யூனிசமும் பார்பனீயத்தின் முக மூடிதான்
migavum arumai nandru⚡⚡⚡...
பதிலளிநீக்கு