வியாழன், 19 நவம்பர், 2020

நடிகர் பிரபுதேவா பீகார் டாக்டரை திடீர் திருமணம் செய்தார்!

Raj - tamil.filmibeat.com சென்னை: பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா, டாக்டரை திருமணம் செய்துகொண்டார். 

டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர், பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பணியாற்றிவருகிறார். தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கும் இவர், சில படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விஜய் நடித்துள்ள போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், தபாங் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கிலும் சில படங்களை இயக்கி இருக்கிறார்.

சல்மான் கானின் ராதே இப்போது சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இப்போது யங் மங் ஜங், ஊமை விழிகள், பாஹீரா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. சில படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.



மலர்ந்தது காதல் இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத்-தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் விஜய்யின் வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

முறந்தது காதல் இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார், பிரபுதேவா. இவரை திருமணம் செய்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், கல்யாணம் வரை சென்ற இந்த காதல், பிறகு திடீரென முறிந்தது. 2012-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

செய்தி உண்மை இந்நிலையில், பிரபுதேவா டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அந்தச் செய்தி உண்மை என தெரியவந்துள்ளது. பிரபுதேவா, சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

பிசியோதெரபி டாக்டர் அவர் பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர். மும்பையில் பிரபுதேவா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவருக்கு பிசியோதெரபி செய்ய வந்துள்ளார் இந்த டாக்டர். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனாலும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

சம்மதிக்க வைத்தனர் பின்னர் பிரபு தேவாவின் குடும்பத்தினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் சென்னையில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிற


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக