திங்கள், 23 நவம்பர், 2020

நடிகர் தவசி காலமானார்!!

 Actor Thavasi has passed away !!

 nakkeeran : புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்.   'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தவசி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டது. இவர் பாரதிராஜாவின், 'கிழக்குச் சீமையிலே' படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.    கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பணஉதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று திரைத்துறையினர் பலரும் அவருக்கு உதவிகளைச் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் தவசி காலமானார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக