ஞாயிறு, 22 நவம்பர், 2020

அமித்ஷா : பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன??

 P
rakash JP
: திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
* சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University)
* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
* கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
* திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
* ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.
* சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)
* திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)
* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
மேலும்,
* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின...
* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" மருத்துவமனையாக மேம்பாடு.
* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.
* 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
* 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
* 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
* சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.
* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
* சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.
* 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..
* நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.
* இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, திமுகவால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக