காயமின்றி முருகன் அருளால் தப்பியதாக கூறியுள்ளார் குஷ்பு. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வரும் குஷ்பு, கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று கார் மூலம் கிளம்பினார். ெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது.
அப்போது குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு இலேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் தனது கணவர் கும்பிடும் கடவுள் முருகன் அருளினால் தப்பியதாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக