தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடேனுக்கு வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார்” என்று தெரிவித்தார்.
”அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்றுத் தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை அடுத்த துணைத் தலைவராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி” என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கர் அல்லாத முதல் பிற நாட்டவர் ஆவார். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண அவரது வெற்றி உதவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும்” என்று கூறியுள்ளார்.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக