வியாழன், 26 நவம்பர், 2020

வர்ணம் சாதி என்பதே வைதிகத்தின் ஆணிவேர்.

Image may contain: text that says 'மனித நேயமும் சமத்துவமும் இல்லாத 'சாதி முறை வைதிக சனாதன ஒழிப்பிலேயே அடங்கியுள்ளது. காரணம் வர்ணம் சாதி என்பதே வைதிகத்தின் ஆணிவேர். வைதிகத்திலிருந்து விடுதலை இல்லாதவரை நம் சமூகத்தில் சுய சிந்தனை இருக்காது.சுய சிந்தனை இல்லாத சமூகம் என்றும் முன்னேறாது!'
  Dhinakaran Chelliah : · ஹிந்து எனும் அடையாளத்தில் ஒளிந்து ஆதிக்கம் செலுத்தும் வைதிக சனாதன தர்மம் மற்றும் வைதிக சனாதன நூல்கள் பற்றியும் WhatsApp மற்றும் Facebook குழுக்களில் எழுதினால்,ஹிந்துக்களாக தங்களை தவறாக அடையாளப் படுத்திக் கொள்கிறவர்கள் பொங்கி எழுகிறார்கள். “இந்தக் குழுக்களில் மதங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக ஹிந்து மதத்தைப் பற்றி மட்டுமே தவறாக எழுதுகிறார்கள்” என எழுதுகிறவர்களை முத்திரை குத்தி, admin உதவியோடு அவர்களை குழுக்களிலிருந்து வெளியேற்றுவதோடு அல்லாமல்,பெரும் சமூகத்திலிருந்து தனிமைப் படுத்திவிடுகிறார்கள்.விமர்ச்சிக்கிறவர்களை ஹிந்து விரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் முத்திரை குத்திவிடுகிறார்கள்.இந்த அடக்குமுறையை இப்போதுள்ள எல்லா சமூக ஊடகங்களிலும் (social media)பரவலாக காண முடிகிறது.
சமூகத்தின் விளிம்பு நிலை மக்களை இழிவுபடுத்தும்,அவமானப் படுத்தும்,அச்சுறுத்தும் நூல்களைப் பற்றி பேசுவது எழுவது எந்த விதத்தில் தவறு?. என் வீட்டில் கோடி பிரச்சனைகள் இருக்கும் போது அடுத்த வீட்டுப் பிரச்சனை எனக்கு எப்படி முக்கியமாகும்?
போகட்டும் என ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றோர் விட்டிருந்தால் சதி எனும் கொடுமை வைதிகத்தை விட்டு ஒழிந்திருக்குமா? பால்ய விவாஹம் வைதிகத்தில் இன்றும் நடைமுறையில் இருந்திருக்குமே? பெண் குழந்தையின்
கல்யாண வயது ஆறு வயதாகவோ ஏழு வயதாகவோ நீடித்திருக்குமே?இது சரியா?
மகான்களாக போற்றப்படும்
இராமலிங்கர், ஶ்ரீ நாராயண குரு,அய்யா வைகுண்டர்,சட்டம்பி ஸ்வாமிகள் செய்த புரட்சியால்தான் வைதிகத்தின் ஆதிக்கம் தென்னிந்தியாவில் ஓரளவு குறைந்துள்ளது.
இவர்களை யாரும் ஹிந்து விரோதிகள் என ஒதுக்கிவிடுவதில்லை.இவர்கள் எழுதிய நூல்கள் இன்றும் மக்களால் போற்றப் படுகிறது.இந்த மகான்கள் அனைவருமே வைதிகம் தோற்றுவித்த சாதியை எதிர்த்தவர்கள். ஆனால் இவர்களே சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தப் படும் அவலமும் வைதிக ஆதிக்கம் உள்ள ஊடகங்களால் நிகழ்ந்துள்ளது.
மனித நேயமும் சமத்துவமும் இல்லாத ‘சாதி’ முறை வைதிக சனாதன ஒழிப்பிலேயே அடங்கியுள்ளது.காரணம் வர்ணம் சாதி என்பதே வைதிகத்தின் ஆணிவேர்.வைதிகத்திலிருந்து விடுதலை இல்லாதவரை நம் சமூகத்தில் சுய சிந்தனை இருக்காது.சுய சிந்தனை இல்லாத சமூகம் என்றும் முன்னேறாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக