வெள்ளி, 27 நவம்பர், 2020

திமுகவில் மீண்டும் இணைகிறாரா முக அழகிரி? பேச்சு வார்த்தையில் சுமூகம் என தகவல்

வெப்துனியா  :தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன அந்த வகையில் திடீரென அரசியலில் மீண்டும் குதிக்க இருப்பதாக முக அழகிரி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் முக அழகிரி பாஜகவில் சேரப் போவதாகவும் வதந்திகள் வெளியாகின. இந்த நிலையில் முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.          இதன்படி இருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் திமுகவில் முக அழகிரி சேர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது . இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதையும், முக அழகிரி திமுகவில் சேருவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக