திங்கள், 16 நவம்பர், 2020

மூக்குத்தி அம்மன்.. தியேட்டர்ல ரிலீஸ் பண்ணா இன்னொரு ரவுண்ட் ஓடுறதுக்கும் வாய்ப்பிருக்கு... நல்ல எண்டர்டெய்னர்...


Sarav Urs  :  மூக்குத்தி அம்மன்.. தியேட்டர்ல ரிலீஸ் ஆகிருந்தா ஒரு ப்லாக் பஸ்டர் ஆகிருக்க வாய்ப்பிருக்கு. பல எடத்துல கத்தியை போட்டிருந்தாலும் நச்சுன்னு நாலு ஷாட் சரியா அமைந்து படத்தை போரடிக்காம தூக்கி விட்டுருக்கு... ராகவா லாரன்ஸ்க்கு பேய் ஹெல்ப் பண்ண ப்ளாட் செட் ஆன மாதிரி பாலாஜிக்கு சாமி ஹெல்ப் பண்ண ப்லாட் செம்மையா செட் ஆகிருக்கு அடுத்தடுத்து 2, 3 என மூக்குத்தி அம்மன் விஜயத்தை எதிர் பார்க்கலாம். நயன் கால்ஷீட் கிடைக்கலைன்னா புது புது அம்மனையும் பார்க்கலாம். நயன் வழக்கம் போல பிரமிப்பா இருந்தது பார்க்க.., ஊர்வசிக்கு இது ஒரு கம்-பேக்'ந்னு தான் சொல்லணும் காஞ்சனாவில கோவை சரளா மாதிரி எக்சாக்டா பொருந்தி போறாங்க., சூரரை போற்றுல அட்டகாசமா பண்ணிருந்தாலும் இதுல வேற லெவல் பெர்பார்மன்ஸ்..,

அம்மனை வச்சே போலி சாமியார்களை விளாசிருப்பது ஒரு நல்ல ட்ரிக். செம்மையா எஞ்சாய் பண்ண முடிஞ்சது. படத்துக்கு தேவையான பிரமாண்டமும் இருந்தது, நயன் மேல நம்பிக்கை வச்சு ப்ரொடியூசர் இறக்கிருப்பார் நினைக்கிறேன்.
அந்த ரிச்நெஸ், சாமிக்கான மாஸ், காமடி, நிகழ்கால ஆன்மீக அரசியல்ன்னு எல்லாமே பொருந்தி நல்ல படமா வந்திருக்கு... அவசியம் பாருங்க, நல்லாருக்கு.
தியேட்டர்ல ரிலீஸ் பண்ணா இன்னொரு ரவுண்ட் ஓடுறதுக்கும் வாய்ப்பிருக்கு... நல்ல எண்டர்டெய்னர்..., இதை தொடர்ந்து அம்மன் படமா வந்து படுத்தாம இருந்தா சரி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக