ஞாயிறு, 8 நவம்பர், 2020

கழிவறை நீரில் பானி பூரி..! வெளியான சிசிடிவி..! கடையை பந்தாடிய கஸ்டமர்கள்..!

  sathiyam.t :பானி பூரி என்பது பலருக்கும் நெருக்கமான உணவாக தற்போதைய சூழலில் மாறி வருகிறது. ஆனால், பல்வேறு கடைகளில், அந்த உணவை சுகாதாரமற்ற முறையில், தயாரிக்கின்றனர். இந்நிலையில், மும்பை கோல்ஹாபூரில் உள்ள ரன்கலா ஏரிக்கு அருகில், பானி பூரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனை செய்யும் பானி பூரி சுவையாக இருப்பதாக கூறி, எப்போதும் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இவ்வாறு இருக்க, அந்த கடையின் ஊழியர், பானி பூரியின் தண்ணீரில், கழிவறையில் உள்ள நீரை கலந்துள்ளார். கழிவறை நீரில் பானி பூரி..! கடையை பந்தாடிய கஸ்டமர்கள்..! வெளியான சிசிடிவி..! இந்த விஷயம் அங்கிருந்து சி.சி.டி.வி-யில் பதிவாகிய நிலையில், இதுதொடர்பான வீடியோவும், இணையத்தில் வைரலாகி பரவியது.

இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள், அக்கடையில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த பொருட்களையும், தெருவில் வீசினர்.

பொதுவாக உணவகங்களில் சாப்பிடும் பொருட்கள், தரமானதாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சுவைக்கு ஆசைப்பட்டால், இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக