புதன், 11 நவம்பர், 2020

யூதர்களின் உள்ளம் கவர்ந்த கமலா ஹாரிஸ் .. உண்மையில் இவர் யார்? இவரின் கொள்கை என்ன?

இவர் ஒரு இந்திய தமிழ் பெண்ணாக ஒரு ஜமேக்கா கறுப்பு இன பெண்ணாக  ஒரு அமெரிக்க பெண்ணாக எல்லாம் கருதப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் .  

கமலாவை பற்றிய பிம்பம் ஊடங்களால் இப்படித்தான்  வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.    ஆனால் கமலாவை பற்றிய உண்மைகள் கொஞ்சம்  வித்தியாசமானவையாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு கமலா டக்ளஸ்    எக்கோம் என்பவரை (இரண்டாவது கணவர்)  வாழ்க்கை துணையாக்கி கொண்டார் . 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று செனட்டர் ஆனார் . இந்த 2020 ஆம்  ஆண்டு உதவி குடியரசு தலைவர் ஆகியுள்ளார்.

கமலாவின் கணவர் டக்ளஸ் எம்கோப்  ஒரு யூதர் . வழக்கறிஞர் .   அதுவும் சாதாரண வழக்கறிஞர் கிடையாது . பல மில்லியன் டாலர்கள்  சம்பாதிக்கும் சட்ட நிபுணர்..         அவரின் முதல் மனைவி (Kerstin Emhoff ) திரைப்பட ஊடக துறையில் பெரும் வெற்றி பெற்றவர். அவரின் திரைப்படங்களும் கிராமி ,. கேன் போன்ற பல படவிழாக்களில் பரிசு பெற்றவைதான்.  

அவரின் அப்போதைய கணவர் டக்ளசும் எக்கோப்  மீடியா எண்டெர்டெயின்மென்ட் துறையை பிரதானமாக கொண்ட வழக்கறிஞராக புகழ் பெற்றவராகும்.  

கமலா ஹாரிஸின் ஊடக வெளிச்சம் என்பது  கணவரின் மீடியா துறை சார்ந்த  அனுபவங்களாலும் வர  வாய்ப்புண்டு  

ஆனால் இதை வீட வேறு பல முக்கிய காரணங்கள் உண்டு.. 

அமெரிக்காவின் பிரதான யூத அமைப்போடு ( AIPAC ) கமலா மிக நல்ல உறவை கொண்டிருக்கிறார்.

இஸ்ரேலுக்கு வருகை தந்த கமலா இஸ்ரேல்  பற்றி பேசும்பொழுது  அசல் பிறவி யூதர்கள் பேசும் அத்தனை பாயிண்டுகளை உணர்ச்சி மேலிட பேசியுள்ளார் .  

இஸ்ரேலியர்களுக்கு தங்கள் நாட்டின் பாரம்பரியம் பற்றி இவர் பேசியது நிச்சயம் சாதாரண விடயம் அல்ல . உச்சி முதல் பாதம் வரை வைத்த ஒரிஜினல் ஐஸ் அந்த பேச்சுக்கள். 

யூதர்களுக்கு தங்களின்  வரலாறு பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாம் மிகவும் உசத்தி என்று பார்ப்பனர்களை போலவே ஒரு அழுத்தமான  நினைப்பு  உண்டு.  

கமலாவோ கணவரின் யூத பாரம்பரியத்தில் விருப்பம்   கொண்டவர் போலவே தெரிகிறார்.

ஏற்கனவே பார்ப்பனர்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி இவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் உண்டல்லவா?

இஸ்ரேல் விடயத்தில் அமெரிக்க ஜனநாயக கட்சியை விட  அமெரிக்க குடியரசு கட்சியே அதிக இஸ்ரேல் ஆதரவை வெளிக்காட்டும்.

இஸ்ரேலுக்கு  ஆயுதங்கள் நிதி உதவிகள்   வழங்குவதில் குடியரசு கட்சி நிபந்தனை விதிப்பதை கடுமையான கொள்கையாக கொண்டிருக்கவில்லை 

ஜனநாயக கட்சி இஸ்ரேலுக்கு வழங்கும் நிதிக்கு பலஸ்தீன உரிமைகள் பற்றி கோட்பாடுகளை முன் நிபந்தனையாக கொள்ளும் வாய்ப்பு உண்டு .

இங்கேதான் கமலா ஹாரிஸ் தனது முக்கிய நோக்கத்தை வெளிக்காட்டி உள்ளார் போல தெரிகிறது .

பாரம்பரிய ஜனநாயக கட்சியின் போக்கிற்கு மாறாக அதி தீவிர இஸ்ரேலிய ஆதரவை கமலா ஹாரிஸ் கொண்டுள்ளார் . 

இஸ்ரேலின் பாதுகாப்பு பாரம்பரியம்  பற்றி எல்லாம் ஒரு இஸ்ரேலியராகவே வகுப்பு எடுப்பார்.

இப்போது அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக ஒரு யூத இனத்தவர் (First Jewish vice presidential spouse: Douglas Emhoff ) அமெரிக்க குடியரசு தலைமைக்கு அருகில் வந்துள்ளார் . 

கமலா ஹாரிஸின் வரவால் இது சாத்தியமாகி உள்ளது.

எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா 30 பில்லியன் டாலர் உதவியாக வழங்க உள்ளது.

இந்த உதவிக்கு பாலஸ்தீனிய விவகாரத்தோடு தொடர்பு படுத்ததும் எந்த நிபந்தனையையும் கமலா ஹாரிஸ்விரும்ப மாட்டார் . 

ஆனால் ஜனநாயக கட்சி பாலஸ்தீனிய விடயத்தை கொஞ்சம் அனுதாபத்தோடுதான் அணுகும் . அதன் பாரம்பரியம் அது .. 

ஜனநாயாக கட்சியில் ஒரு குடியரசு கட்சிக்கு உரிய பாலஸ்தீனிய கொள்கயை கொண்டிருக்கும் தலைவர் கமலா ஹாரிஸ்.

நடந்து  தேர்தலில் . டொனால்டு ட்ரம்ப் கொஞ்சம் சவாலான வேட்பாளராக இருந்ததால் ஜனநாயக கட்சிக்கு பலம் வாய்ந்த யூதர்களின் ஆதரவு மிக முக்கிய தேவையாக இருந்தது.

யூதர்களின் பணபலம் யூதர்களின் அளவு கடந்த ஊடக வெளிச்சம் எல்லாமே கமலாவுக்கும்  ஜனநாயக கட்சிக்கும் பெரும் பலத்தை கொடுத்தது. 

மொத்தத்தில் ஊடகங்களால் கமலாவின் பிம்பம் ஊதி  பெருப்பிக்க பட்டது. அவர் யார் அவரின் உண்மையான கொள்கை எதுவென்றே சரியாக தெரியாமலேயே அவரை நம்ம ஆளு என்று கறுப்பு இனமக்கள் ஒரு புறமும். . 

ஒபாமாவின் அடுத்த வாரிசு என்று பொதுப்புத்தி வாக்காளர்களும் பெரு வெற்றியை பைடன் கமலா கூட்டணிக்கு கொடுத்துள்ளனர் .

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக