வியாழன், 26 நவம்பர், 2020

இஸ்லாத்தை காப்பாற்றுகின்றேன் என்று துள்ளி வருகின்றவர்கள் யாருமே இஸ்லாத்தை படித்தவர்கள் இல்லை!

Rishvin Ismath : · இஸ்லாம் முறையாக விமர்சிக்கப்படும் பொழுது 'இஸ்லாத்தை காப்பாற்றுகின்றேன்' என்று துள்ளிக் குதித்து கிளம்பி வருகின்றவர்கள் யாருமே இஸ்லாத்தை படித்தவர்கள் இல்லை, குறைந்த பட்சம் குரானின் மொழிபெயர்ப்பைக் கையால் தொட்டது கூடக் கிடையாது. சஹீஹுல் புகாரி என்ற பெயரை காதல் கேட்டதைத் தவிர அதனை கண்ணால் கூடக் கண்டது கிடையாது முஹம்மது நபி மலம் கழித்த விடயம் போன்றவை எல்லாமா ஹதீஸில் வரும் என்று என்னிடமே கேட்கின்றார் ஒருவர், ஆக இவருக்கு ஹதீஸ் என்றாலே என்னவென்று தெரியாது. மலம் கழித்தது மட்டுமல்ல, எப்படி காலை வைத்து குந்தினர், எந்தத் திசையை பார்த்துக் குந்தினார் என்பதில் இருந்து அவரது தாடியில் எத்தனை மயிர்கள் நரைத்து இருந்தன என்பது வரை ஹதீஸில் வரும் என்று நான் தான் படித்துக் கொடுக்க வேண்டியாகி விட்டது.
ஒரு காலத்தில் கத்த வீட்டில் தலைக்கு கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு கூட்டத்துடன் கோரஸாக "யாஸீன்" என்று ஸீன் போட்டுக்கொண்டு இருந்த கேஸ் எல்லாம் இன்றைக்கு எதோ PJ, சாகிர் நாயக் வகையறாக்களின் இரண்டொரு விடியோக்களை, அதுவும் இடை நடுவில் நடுவில் பார்த்துவிட்டு இஸ்லாத்தை காப்பற்றுகின்றேன் என்று புறப்பட்டு வந்துகொண்டு இருக்கின்றன.
இஸ்லாத்தை முறையாக கற்ற யாருமே இந்தப் பக்கம் வருவதில்லை, ஏனென்றால் அவர்களுக்குத்தான் தெரியுமே, 'இஸ்லாத்தை காப்பாற்ற முடியாது' என்கின்ற உண்மை.
பிரெஞ்சு விஞ்ஞானி Maurice Bucaille (விஞ்ஞானியா? 😹) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றும், உலகத்தின் நடு சென்டரில் தான் கஃபா இருக்கின்றது என்றும், பிர்அவ்னின் உடல் (பிர்அவ்ன் என்று ஒரு மனிதனா? 😂) செங்கடலில் கண்டுபிடிக்கப் பட்டது, அதனை அல்லாஹ்தான் பாதுகாத்தான் என்றும் நம்பிக்கொண்டு விஞ்ஞானம் பேசும் "யாஸீன்" கேஸ்கள் தான் இஸ்லாத்தை காப்பாற்ற பாடுபடுகின்றன.
'புராக்கில் ஏறி மிஹ்ராஜ் போனேன்' என்று முஹம்மது நபி கதை விட்ட அந்த இரவில் அவர் யார் வீட்டில் படுத்து இருந்தார் என்பது கூட இவர்களுக்கு தெரியாது. (இனியாவது தேடிப் பார்ப்பார்களா, இல்லை அதையும் நான்தான் இந்த 'யாஸீன்' கேஸ்களுக்கு படித்துக் கொடுக்க வேண்டி வருமோ?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக