புதன், 18 நவம்பர், 2020

இலங்கை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க அரசுதீர்மானம் .. மலையக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை


தினக்குரல் :பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்தராஜபக்ஷவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக  உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழி லாளர்களது சம்பளம்  தீர்மானிக்கப்பட்டு வரு கிறது.  இதனை வரவு செலவு திட்ட ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப் பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களுக்கான ஒரு நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்ட திருத்தங்கள் ஜனவரியில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக