வியாழன், 26 நவம்பர், 2020

வன்னி பரப்பில் சுமார் ஒன்றரை லட்சம் மலையக மக்கள் .. பலருக்கு காணி உறுதி இல்லை, வாக்குரிமை இல்லை, புலிகளின் பிடியில் சிக்கிய கொடுமை..

Image may contain: one or more people, people standing, tree, sky, child, outdoor and nature

வரதன் கிருஸ்ணா : · வன்னியும் மலையகமும் ஒரு பார்வை! யுத்தம் முடிவுற்று பதினோரு வருடங்கள் ஆகிவிட்டன அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பினர் இந்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வன்னி பெருநிலப்பரப்பு என்பது மிகவும் ஜனத்தொகை குறைந்த ஒரு நிலமாகவும் அதைவிட பெருங்காடுகளை கொண்ட ஒரு நிலப்பகுதியாகும். 

58, 77 , 83 தென்னிலங்கை கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தவர்கள் இந்த நிலப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் அதைவிட தன்னார்வ அமைப்புக்களின் உதவிகளோடு குடியமர்த்தப்பட்டனர். இதில் முன்னணியாக செயற்பட்ட அமைப்பு காந்தீயமாகும் அடுத்தது தமிழர் புனர்வாழ்வு கழகம் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் குடியேறினர். அவர்களுக்கு தரிசு நிலங்கள் மற்றும் காடுகளை வெட்டி நிலங்கள் வழங்கப்பட்டு இருந்தன எனினும் அவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைசெய்தும் சிறு விவசாயங்கள் ஊடாக வாழக்கை நடத்தி வந்தனர்.

எழுபதுகளுக்கு பின்னர் அங்கு குடியேறியபோது வடக்கு மற்றும் கிழக்கில் தனிநாட்டு கோரிக்கை உருவெடுத்த நிலையில் வன்னிக்கு குடிபெயர்ந்த மலையகத்தவர்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கைமுறையை ஏற்படுத்த முடியவில்லை நிலவுரிமை சட்டப்பூர்வமாக இருக்கவில்லை வாக்குரிமை பதிவுகளில் இல்லை வெறுமனே அங்கு வாழும் ஒரு நிலைமட்டுமே இருந்தது.
சந்திரிகாவின் ஆட்சிகாலதிதில் வடக்கைவிட்டு வெளியேறிய மக்கள் சிறிது காலத்தில் வன்னியில் இருந்தவர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேறினர் சுமார் 90 வீதமானோர் பிரமாவட்டங்களுக்கும் யாழ்மாவட்டத்துக்கும் சென்றுவிட்டனர் ஆனால் மலையக மக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை காரணம் அவர்களிடம் எந்த வசதியும் இருக்கவில்லை. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது அதற்கு முகம் கொடுத்தவர்களும் அவர்கள்தான் .
புலம்பெயர்ந்த சுமார் 10 லட்சம் தமிழர்களில் 80 வீதமானவர்கள் வடக்கை சார்ந்தவர்கள் ஏனையோர் கிழக்கு மற்றும் வன்னியை சேர்ந்தவர்கள் ஆனால் மலையக தமிழர்கள் ஒரு வீதமானவர்கள் கூட புலத்தில் இல்லை.
புலத்தில் குடியேறியவர்கள் சுமார் முப்பது இருபது வருடங்களுக்கு முன்னர் வந்தவர்களே அதிகமானோர் அப்போ யுத்தம் நடந்த காலங்களில் வன்னி நிலப்பரப்புக்குள் அதிகமாக பலியானவர்கள் யார்? என்ற கேள்வியுடன் 2014 மற்றும் 2015 காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வன்னி நிலப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மலையக மக்கள் வாழ்கின்றனர் அதாவது இறந்தவர்களில் எஞ்சியவர்கள் எனினும் அவர்கள் வாழும் நிலங்களுக்கு காணி உறுதியில்லை 80 வீதமானவர்களுக்கு வாக்குரிமை இல்லை. இத்தனைக்கும் ஈழப்போராட்டத்தில் பல தளபதிகள் மற்றும் போராளிகளை போராட்டத்தில் விகுதியாக்கி இருக்கின்றனர். எனினும் இன்றும் ஒரு நிலமற்ற சமூகமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக