வெள்ளி, 20 நவம்பர், 2020

மலைகள் பேசினால்.. மலையகத்தில் இருந்து ஒரு குரல்! எஸ்தர் நாதனியேல் இலங்கை!

Esther Nathaniel : · அலுலகத்தில் என்னுடன் பணியாற்றும் ஒருவர் கடும் பக்தர்

கந்த சஷ்டி கோதாவரி காளியாச்சீ காப்பு என பல விரதங்களை பிடிப்பார். நேற்று அவர் ஒரு தொலைபேசியில் உரையாடுகிறார் வணக்கம் சோதிடர் அய்யா நான் இன்னார் கதைக்கிறேன் அய்யா எனது உறவுமுறை பெண் வெளிநாட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அது எங்களுக்கு தொடக்கா இல்லை புடக்கா என கேட்கிறார் ??         வேலை கெட்ட சோதிடனும் சொல்கிறார் தொடக்குத்தானாம் விரதம் புடிக்காதீங்கோ தொடக்கு புடக்கு கழியட்டும் என்கிறாராம் பாருங்கள் ஒரு குழந்தை எந்த பாவமும் புண்ணியம் அறியாத பச்சை உயிரை தொடக்காம் இவனுகளுக்கு பொம்பள உடம்புல ஓடும் இரத்தம் வெளிய வந்தா தொடக்கு உள்ளுக்கு போனா மட்டும் தொடக்கு இல்லை
மலையகத்தில் நோட்டன் என்ற இடமுண்டு கடுமையான குளிரும் மழையும் உள்ள இடம்
நான் சில நண்பர்களுடன் பத்து வருடம் முன்னார் தெப்பட்டன் என்ற இடத்துக்கு புறப்பட்டோம் தெப்பட்டனில் இறங்கி ஒரு பத்தடி நடக்க முடியாது அட்டை அப்பும் விறு விறுவென உடம்பில் ஏறும் அட்டைக்காடு
சிந்தித்துப் பாருங்கள் அங்கு வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களின் நிலைபாட்டை. அட்டையா எந்தப்பக்கம் வருதோ தெரியாது பஸ் வசதியும் இல்லை நோட்டன் என்பது பாதி சிங்களவர்களும் வாழும் இடம்.
நாங்களும் சித்தாலேப சவர்க்காரம் பூசிக் கொண்டு ஊருக்குள் இறங்கிட்டோம் நாங்கள் போவது அங்கே நரிக்குறவர்களை நாடோடிகளை சந்தித்து சில ஆவணங்களை சேகரிக்கவே.
மேலும் அங்கே அவர்களுக்கு வாக்குரிமை பெறுவதில் ஆர்வமில்லை
காரணம் அவர்கள் தோட்டங்களுக்கு தோட்டம் போய் விடுவார்கள்.
நாங்கள் போன நேரம் சாதுவான மழை விட்டு விட்டு வெயில் இப்படியொரு காலநிலை.
லயம் தான் அவர்களின் வாழ்விடம்.வீடுகள் வெறிச்சோடியும் கதவுகள் உடைந்தும் ஜன்னல்கள் ரெட்டு என அழைக்கும் உர பேக்குகளால் அடிக்கப்பட்டும் வயதுபோன முதியவர்கள் எலும்பும் தோலுமாக கண் மங்கி உணவும் சரியான பராமரிப்பும் அற்று அமர்ந்திருந்தனர் .
என்னைக் கண்டதும் சில சிறுமிகள் வேடிக்கைப் பார்க்க ஓடி வந்தனர் சில சில பெண்களை சந்தித்தேன்.நீர் இல்லை தண்ணீர் எடூத்து வர தொலைவில் போனதாகச் சொன்னார்கள். அவர்களை பற்றி கேட்கும் போது தமிழும் உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தது அது அந்த மக்களின் பேச்சுவழக்கு.
வீடுகளில் வறுமை தொங்கிக் கொண்டிருந்தது.
ஆண்களும் பெண்களும் குறிச் சொல்ல வேறு தோட்டங்களுக்கு செல்கிறார்கள் உள்ளூர் தோட்டங்களில் அவர்களை கவனிக்க யாருமில்லை
கணக்கெடுப்பதுமில்லை சாதியில் மிக மிகத் தாழ்ந்தவர்களும் அரசின் எந்த சலுகைகளும் அற்றவர்கள் ஆனாலும் அவர்கள் இலங்கை மக்களே சனத்தொகை
கணக்கெடுப்பில் மத்தியவங்கி அறிக்கையில் மட்டும் இருக்கிறார்கள்.
மலசலக்கூடம் என்றால் என்னவென்றே தெரியாத வாழ்வு குறவர்களின் வாழ்வு
நான் பாடசாலைக்கு அதிகமாகப் போவதில்லை காரணம் டீச்சர் தொட்டாதுக்கெல்லாம் அடிப்பார்.அடி தாங்க மாட்டேன்
.அட்டனில் ஹைலண்ஸ் கல்லூரியில் ஒரு கணித ஆசிரியர் கணிதம் செய்யவில்லையென அதிபரிடம் கூட்டிப்போனார்.
அழைத்துச் சென்ற அத்தனைப் பேரும் பெண்கள் அதிபர் உள்ளேயிருந்து ஒரு கம்பை அல்ல ஒரு கட்டையைக் கொண்டு வந்தார் .பொலிசாரின் கையிலுள்ள தடி போன்றது இன்னும் அந்த நிகழ்வு சில வேளை நான் மரண படுக்கையிலிருந்தாலும் மறக்காது.
சுந்தரம் என்ற மெல்லிய கண்ணாடிபோட்டிருப்பார் ஹைலண்ஸ் கல்லூரி அதிபர் விடுதியில் வசித்தவர் கையை பிரட்டச்சொல்லி போட்டார்ஒரு அடிதான் நான் கத்தி துடித்தேன் நான் நினைத்தேன் கை கழன்று விழுந்து விட்டதோ என்று வந்த அத்தனைப்பேரையும் விளாசினார்
கையை பிடித்துக்கொண்டு ஒரு இரண்டு மணித்தியாலம் எல்லோரும் அழுதிருப்பார்கள்.
கை இரண்டு நாள் சோப்பை எடுத்து உடலுக்கு பூசி குளிக்க இயலாது போனது
நகமெல்லாம் கறுத்துவிட்டது
ஆகவே நான் பாடசாலை செல்வதேயில்லை பாடசாலை போகாமல் படித்தது நான் மட்டுமே
இப்படியான நிலையில் வீட்டிலிருந்தால் குறவர்கள் வருவார்கள் அம்மா தங்க முகமே வெளியே வாம்மா என்பார்கள் தங்க முகமில்லை கறுப்பு முகம்தான் இருக்கு என்பேன்
வெளியே வந்தால் நீ பணக்காரி ரராஜகுமாரன் வருவான் உன் காட்ல மழை என்ற வாயில் வந்த பொய்யெல்லாம் சொல்வார்கள் பொய் என்பதில்லை இப்படித்தான் சோடிக்கப்பட்டுள்ளது அவர் தம் வாழ்வு.
கொண்டைப் போட்டு பெரிய பொட்டு வைத்து சேலையைஇழுத்துக்கட்டி மூக்குத்தி வளையல் என அப் பெண்கள் அழகானவர்கள்.
இடுப்பில் குழந்தையைக் கட்டி வைத்திருப்பார்கள் அம்மாயி நிறைய கொடுப்பா இந்தாம்மா பொய் சொல்லாத தருவத வாங்கிட்டுப் போ என்பாள் சுத்தி சுத்திப் பார்த்து இரண்டு சவுசோக்கா காய் வேணும் என்பாள் , நான் பிடுங்கிக் கொடுப்பேன் கொய்யாப்பழம் சரி வாங்கிக்கோ கொடுப்போம்
அரிசி மாவு பருப்பு சோப்பு எல்லாமே அம்மாயி கட்டுவாள் அம்மா கொடுக்கிறோமுன்னு ஒரே வராத போய் வா என்பாள் எல்லாம் அந்த இடுப்பில் தொங்கும் குழந்தைக்காக!!
இது ஒரு சோதிட வாழ்வு ஏழைகளின் சோதிட வாழ்வு
நவீன சோதிடர்கள் தொலைபேசி இண்டநெற் இணையம் அத்தனையிலும் உழைக்கிறார்கள்
பிள்ளைக்கு வயசுக்கு வந்திட்டது இரத்தம் தொடக்கு அதுக்கு ஒரு சோசியம்
குறிப்பு
பிள்ளை பொறந்திட்டது தொடக்கு..
செத்தப்பிணம் தொடக்கு
பிறப்பிலிருந்து இறப்புவரை தொடக்கு பார்ப்பது தமிழன் மட்டுமே.
இந்த பொய்யர்களை கோடீஸ்வரர்களாக்குவதும் தமிழர்களே
ஒரு மனிதனின் வாழ்வை சொல்லும் சோதிடன் அவனது மரணம் இன்று தான் என துல்லியமாக கணிக்க முடியுமா??
இன்று இத்தனையாம் திகதி இன்ன இடத்தில் நீ சாகுவாய் கொரோணொ உன்ன கொண்டு போகும்ன்னு எந்த சோதிடனாலும் சொல்ல முடியுமா ???
சொல்லுவான் செவ்வாயில குற்றம் புதன் கேடு வியாழன் வெளங்காதுன்னு
கோள்களுக்கு காது இல்லை என்ற தைரியத்தில் ..
யாழ்ப்பாணத்தில்
வைத்தியருக்கு ஒரு கோடி அவருக்கு வடிவான பெண் கன்னி கழியாதது
அப்படியே எடுத்து டொக்டருக்கு படைக்கிறார்கள் .
ஆசிரியர் அரச ஊழியருக்கு கொஞ்சம் ஏப்ப சாப்பையான பொண்ணு அதோ காதலிச்சி கைவிடப்பட்டது அது பரவால்லை சமாளிக்கீறோம் இவ்வளவு சீதனம் குறிப்பில மேலே எழுதுவார்கள் சாதியை மிகத் துல்லியமாக
இப்படி தொடக்கில் தொடங்கி முடிவற்று இறப்பவார்களே மானுடர்கள்தான் தமிழர்கள்.
விரதம் பிடிக்கிறார்கள் யாருக்காக
பெண்ணின் உடம்பில் சொட்டு இரத்தம் கண்டா போதும் அய்யோ தீட்டு தொடக்கு
என் ஏன் பதறுகிறீர்கள் பின்னே பெண் தெய்வங்களுக்கு பட்டாடைக்கட்டி பவளம்பூவில் மாலை போட்டு டிங்கு டிங்குன்னு மணியை அடிக்கிறீர்கள்
எத்தனை ஆயிரம் உயிர்களை மகிந்த குண்டு போட்டு அழித்தார் இரத்தம் சதையும் கிழிந்து தொங்கியது அது தொடக்கு இல்லை 
புலிகோஸ்டி ஒருபக்கம் ஒட்டுக்குழு ஒருபக்கம் மட்டக்களப்பு அம்மான் குறூப் போட்ட வெடியெல்லாம் அதில் செத்து மடிந்த ஆயிரமாயிரம் பெண் போராளிகளின் இரத்தம் தொடக்கில்லையா
இந்த யோனியின் வழியே வழியும் இரத்தம்தான் உங்க தொடக்கா சோதிட மாமணிகளே
நாடோடிக் குறவர்களைப்போல் வாழ்வாதற்கான போராட்டத்தின் தெரிவு குறி சொல்லுதலாகக் கிடக்கும் நீங்களோ தொலைபேசியிலும் இணையத்திலும் நவீன சோதிடர்களாக தொடக்கிலேயே காலத்தை கழிக்கிறீர்கள்
நீங்களெல்லாம் ஒரு நாள் பொய்யுக்கே பொறுக்காமல்
பொடக்கென்று காலம் கொண்டு போகும் என்பதில் அணுவளவேனும் பொய்யில்லை.  இலங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக