பிகார் போர்ஜரி தேர்தல் படிப்பினை .. திமுக கூட்டணி வாக்கு எண்ணும் மையங்களில் அதிரடிக்கு தயாராக வேண்டும்!
Sadhu Sadhath : ·
லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி
பீகார் மக்களையோ ஓவைசியையோ நாம குற்றமோ கேலி கிண்டலோ செய்ய வேண்டியதில்லை .. பீஜேபீயை வெல்லவே முடியாதா என அவ நம்பிக்கையும் கொள்ள வேண்டியது இல்லை ...
முதலில் எண்ண வேண்டியது தபால் ஓட்டுகளை அதன் முடிவுகளை சொல்லிவிட்டுதான் அடுத்து ஓட்டிங் மிசின் ஓட்டுகளை எண்ண வேண்டும் ஆனால் சுமார் 30 தொகுதிகளில் ஈவிஎம் ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியாகதான் தபால் ஓட்டுகளை எண்ணியுள்ளனர்.. கடைசியாக எண்ணிய தபால் ஓட்டுகளிலும் ஒவ்வொரு தொகுதிகளிலும்100, 200, என ஆரம்பித்து 900 ஓட்டுகள் வரையும் செல்லாத ஓட்டு என அறிவித்துள்ளனர் அதனாலேயே சொற்ப்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் 20 சீட்டுகள் வரை தோற்றதாக அறிவித்துள்ளனர் அதிலும் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்க வேண்டிய தொகுதிகள் ...
ஆகவே பீகாரில் பீஜேபீ வென்றிருப்பது பக்கா ஃபோர்ஜரிதான் அதுவும் நூறு இருநூறு என சில்லரை ஓட்டுகளில் தான். தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு சென்ற தேர்தலில்ல எப்படி திமுக தோற்கடிக்கப்பட்டதோ அதே போல முடிவுகளை அறிவித்துவிட்டு நீ போய் கோர்ட்டில் பாத்துக்க என எகத்தாளமாக நடந்துகொண்டுள்ளனர்
கோர்ட்டை பற்றிதான் நமக்கு தெரியுமே அதன் லட்சணம்தான் டிண்கு சிரிக்கும் அளவுக்கு இருக்கிறதே .. ஆகவே தேர்தல் பொறுப்பாளர்கள் .. பூத் ஏஜெண்ட்டுகள் கவுண்டிங் பூத் ஏஜெண்ட்டுகள் வாழ்வா சாவா என நடந்து கொண்டால் தாராளமாக சர்வ சாதாரணமாக நரேந்திராவை வீழ்த்தி மண்ணை கவ்வ வைக்க முடியும்..
ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கும் பீஜேபீ கூட்டணிக்கும் இடையே உள்ள மொத்த வாக்கு வித்தியாசம் 0.1 சதவீதம் மட்டுமே .. அதாவது மொத்தமாகவே வெறும் 12000 ஓட்டுகள் வித்தியாசம் மட்டுமே ...
திமுக கூட்டணி வரும் தேர்தலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது வாக்கு எண்ணும் மையங்களில் அதிரெடி தடாலடியான ஸ்ட்ராங்கான டீமை ஏஜெண்ட்டுகளாக களம் இறக்குவதும் எப்படி எல்லாம் ஃபோர்ஜரிகளை முறியடிக்க வேண்டும் என்பது பற்றிய தீவிர பயிற்ச்சியும்தான் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக