ஞாயிறு, 11 அக்டோபர், 2020

PK பிரசாந்த் கிஷோர் பேட்டி : 50% இடஒதுக்கீடு உள்ளவன் 18% ஐ பார்த்து கோட்டாவில் வந்துட்டான்னு இன்னமும்..

Dev JB : நான் கடந்த 1 வாரமாக ஒரே ஒரு திரைப்படத்தைப் சிறிது, சிறிதாக பார்த்து கொண்டிருக்கிறேன். நேரம் செலவிட முடியவில்லையோ அல்லது ஒருவேளை திரைப்பட ஆர்வம் சுத்தமாக போயிருக்குமோனு ஒரு சந்தேகமே வந்துவிட்டது. படமும் லேசு பட்ட படமில்ல. Android Kunjappan. ஆனால் கரண் தாப்பார் WIREக்காக எடுத்த பிரஷாந்த் கிஷோரின் 50+ நிமிடங்கள் போகும் இந்த நேர்காணலை ஒரே மூச்சில் பார்க்கமுடிந்தது. நான் எப்போதுமே வெற்றியை போகஸ் பண்ணும் ஒற்றை aimல் நம்பிக்கை உள்ளவன். கொள்கைக்கு பங்கம் ஏறப்படுத்தாத வழிமுறைகளை முன்னெடுப்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். பேட்டியின் ஹைலைட்ஸ்:
◆ வெற்றிக்கு அந்தந்த தலைவர்கள், கட்சிகளே காரணம். நாங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று தரவுகளை (டேட்டா கலெக்ஷன்) சேகரிக்கிறோம். அதையொட்டி என்ன தேவை என்பதை சொல்வோம். கட்சிகள், தலைவர் தேவைகளை எப்படி நிறைவேற்ற போகிறார் என்ற road map போட்டு அதை தேர்தல் அறிக்கையாக முன்மொழிந்து நிறைவேற்ற வழிவகை செய்து கொள்ள வேண்டும். எங்கள் வேலை இதுமட்டும் தான்.
◆ எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் ஏற்பதில்லை. நான் அந்தந்த மாநிலத்தின் குடிமகனாக இருந்தால் யாருக்கு ஓட்டு போடுவேனோ அவர்களிடம் மட்டுமே வேலை பார்ப்பேன்.
◆ முன்னெடுக்கும் அரசியல் அடித்தட்டு மக்களுக்கான அல்லது சாமானியர்களுக்கான அரசியலாக இருக்கவேண்டும்.
◆ ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மொத்த எண்களின் அடிப்படையில் அல்ல, ஆனால் relative. அதாவது பீகாரின் வளர்ச்சி நன்றாக இருந்தாலும் இன்னமும் 23வது இடத்தில் தான் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் இன்னமும் வேகமாக முன்னேறுகின்றன. அப்படி compare செய்து முன்னேற்ற வேண்டும்.
◆ ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. ஆனால் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டுமானால் ஒரு அரசியல் கட்சிக்கான தனிப்பட்ட தேவையும், value additionம் வேண்டும்.
◆ அந்த கட்சிக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைக் காரணம் அவர்கள்தான். நான் ஒருபோதும் முழு காரணம் இல்லை (ஒத்துழைப்பு குறித்த அவரது வணிக உத்தி அவரை அவ்வாறு சொல்வதை நிறுத்துகிறது என்று நினைக்கலாம்)
◆ அடிமட்ட மக்களுடன் மக்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் தேவையை புரிந்து கொள்ள முடியும்.
◆ இந்திய அரசியலில் சித்தாந்தம் என்பது ஒரு மோசமான பிரயோகமாக மாறிவிட்டது. நமது ஜனநாயகம் இன்னமும் mature ஆகவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
என்னால் சில ஓட்டைகளை காண முடிந்தது. ஆனாலும் வெளிப்படையாக நிறைய சொல்லியிருக்கிறார்.
மேற்சொன்ன அனைத்தும் திமுக ஏற்கனவே தன்னகத்தே கொண்டுள்ளதை பார்க்கமுடியும். பீஹார் ஏற்கனவே JPயின் பூமி என்று சொல்லி ஏறக்குறைய வடக்கில் ஒரு திராவிட நாடாகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையோடு PK இருக்கும் காலம் அவருக்கு சிந்தாந்த அடிப்படையிலான கட்சி தேர்தலில் நிற்கிறது என்றும், சமூக நீதி, சமத்துவம் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கான உயர்வை வழங்கமுடியும் என்பதையும், reservationல் மிக பெரிய நம்பிக்கை கொடுக்கும் என்றும் நம்பலாம். பின்னாளில் அவர் சேரும் இடங்களில் இவற்றை முன்னெடுப்பார் என்றும் நம்பலாம்.
அடுத்து, 2021க்கான முதல்கட்ட தேர்தல் உத்தியாக நான் பார்ப்பது, காவி அதிமுக Vs முற்போக்கு திமுக தான். கொள்கை பேசுவதை குறைத்துகொண்டு நேரடியாக தேர்தல் அரசியலில் மோதும் காலம்.
உதாரணமாக 50% இடஒதுக்கீடு உள்ளவன் 18% ஐ பார்த்து கோட்டாவில் வந்துட்டான்னு இன்னமும் சொல்வதை பார்க்கிறோம்... 18% உனக்கும் இருக்கேடானு சொல்லாமல் இந்த சூ.. இப்படித்தான் என்று பிரிவைதான் முன்னெடுக்கிறார்கள். இதெல்லாம் இப்போதைக்கு மாற்ற முடியாது. அதற்கான நேரமும் இல்லை. உணர்ச்சி வசப்பட்டு வாக்களிக்கும் வாக்காளர் இப்போதைய பிரச்சினைகளை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் நாடு இது.
ஆக!
1. முற்போக்கு திமுக Vs சங்கிகள், அடிமைகள், நீல, கருப்பு, பச்சை, டம்ளர், கருப்பு சங்கிகள்.
2. எடப்பாடி அரசின் இமாலய ஊழல்கள். ஜெயலலிதா ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை.
3. காசுக்காக, பதவிக்காக தமிழகத்தை அடகு வைத்து நீட் முதல் நேற்றைய கொரோனா கொள்முதல் வரை தமிழக மக்களை காவிகளிடம் அடகு வைத்த கையாலாகாத அரசு.
4. செயல்படாத அரசு.
என்பதை வெளிப்படையாக பரப்புரை நிகழ்த்த வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக