வியாழன், 22 அக்டோபர், 2020

திராவிட சித்தாந்தத்தால் தமிழ்நாட்டில் பொருளாதார பரவல்! Consumers + Manufacturers ஒரு சங்கிலித் தொடர்.

Kandasamy Mariyappan : · திராவிட சித்தாந்தத்தால், தமிழ்நாட்டில் பொருளாதார பரவல், ஒரு எளிய விளக்கம்: 1995ல் எனது நண்பர் திரு.K.நடராஜன் அவர்கள் பொருளாதாரம் பற்றி ஒரு எளிமையான விளக்கத்தை கொடுத்தார். ஒரு TV விற்கப்படுகிறது என்றால், நேரடி பயனாளிகள், 1. கடை முதலாளி,
2. Distributor,
3. வாகன முதலாளி,
4. C&F முதலாளி,
5. வாகன முதலாளி,
6. பொருள் தயாரிப்பாளர் (Brand Owner),
7. உதிரி பாகங்கள் தயாரிக்கும் முதலாளி,
8. வாகன முதலாளி,
9. Raw material supplier.
அடுத்து மறைமுக பயனாளிகள்
1. Raw material தரும் தொழிலாளர்கள்,
2. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள்,
3. உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்,
4. வாகன தொழிலாளர்கள்,
5. C&Fல் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,
6. Distributor இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,
7. வாகன நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.
8. விற்பனை கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.
இது, வாங்குபவர்களுக்கும் (Consumers) உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் (Manufacturers) உள்ள ஒரு சங்கிலித் தொடர்.
ஒரு TV விற்கப்படுவதால் இத்தனை நபர்களும் பயனடைகிறார்கள். பிறகு இவர்களின் வாங்கும் சக்தி (Buying power) அதிகரிப்பதால் மேலும் பல பொருட்களை வாங்குவார்கள். அந்தப் பொருட்களின் உற்பத்தி பெருகும். மேலும் பலரின் வாங்கும் சக்தி (Buying power) அதிகரிக்கும்.
வாங்கும் சக்தி (Buying power) அதிகரித்தால் உற்பத்தி பெருகும், உற்பத்தி பெருகினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வேலை வாய்ப்பு அதிகரித்தால் வாங்கும் சக்தி (Buying power) அதிகரிக்கும். இதுதான் சந்தைப் பொருளாதாரம்.
சரி! இங்கே திராவிட சித்தாந்தம் எங்கே வந்தது!!!???
நிலவுடமை பொருளாதார சமூகமாக இருந்த, மன்னர்கள் ஆட்சியிலும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் கல்வி மற்றும் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி மற்றும் பொருளாதார நிலையை எல்லோரிடத்திலும் பரவிட செய்ய பல தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து பற்பல தடைகள் இருந்துகொண்டே இருந்தது.
நிலவுடமைச் சமூகத்திலிருந்து படித்து வந்த டாக்டர்.நடேசன் முதலியார் அவர்களுக்கு மெட்ராஸில் (சென்னை) மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
கல்வி, வேலைகள், பொருளாதாரம் எல்லாம் பார்ப்பணர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே இருந்தது. விதிவிலக்காக ஒரு சில பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்கள் என்று ஆங்காங்கே!
ஏன் என்று சிந்தித்தபொழுது, படிக்க தடை இருப்பதை உணர்ந்து கொண்ட டாக்டர். நடேசன் அவர்கள், டாக்டர்.மாதவன் நாயர், திரு. தியாகராயர் போன்றவர்களை இணைத்து பார்ப்பணர் அல்லாத இயக்கத்தை கட்டமைத்து பெருவாரியான திராவிட சமூகத்தை படிக்க தூண்டுகிறார்.
ஆரம்பத்தில் இவர்கள் ஏன் "பார்ப்பணர்கள் அல்லாத இயக்கம்" என்று பெயர் வைத்தனர் என்ற கோபம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால், RSS/ பார்ப்பணீயத்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருக்குலைந்த பிறகு திராவிடத் தலைவர்களின் செயல்களில் உள்ள நியாயம் புரிந்தது.
பிறகு நீதிக்கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்குகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் சாதிய அடிப்படையில் பிரதிநிதித்துவம் கேட்கின்றனர். நமது நல்ல நேரம், 1920ல் நீதிக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை ஒழிக்கின்றனர். நிறைய பள்ளிகளை நிறுவுகின்றனர். எல்லாத் துறைகளிலும் பார்ப்பணர்கள் அல்லாத மக்களும் வேலையில் சேருகின்றனர்.
மற்றொருபுறம் பெரியார்,காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்குகிறார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
நமக்கு மீண்டும் ஒரு கெட்ட செயலிலும் ஒரு நல்லது நடக்கிறது. திரு. ராஜகோபால் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நீதிக்கட்சி அரசு தொடங்கிய பல பள்ளிகளை மூடுகிறது, மற்றொருபுறம் ஹிந்தியை திணிக்கிறது. இது பெரியார் தலைமையில் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது.
பாட்டுக் கச்சேரிகளிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இருந்த சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழித்து தமிழ் எளிமைப் படுத்தப்படுகிறது.
ஓமந்தூரார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சில பள்ளிகளை திறக்க உத்தரவிடுகிறார். ஆனால் மீண்டும் முதலமைச்சராக வந்த திரு.ராஜகோபால் பல பள்ளிகளை இழுத்து மூடுகிறார்.
தமிழ்நாடு, பெரியார் தலைமையில் ஒன்றிணைந்து திரு.ராஜகோபாலை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு திராவிடரான திரு.காமராஜரை முதலமைச்சர் பதவியில் அமர்த்துகின்றனர். பெரியாரின் அறிவுரைப்படி பல கிராமங்களில் பள்ளிகளை திறக்கிறார். சுமார் 75 குடும்பங்கள் மட்டுமே இருந்த எங்கள் கிராமத்திற்கு பள்ளிக்கூடம் வந்தது அந்த சமையத்தில்தான்.
மத்திய அரசு 60களில் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல நிலவுடமையாளர்களின் நெருக்கடியால் முறையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அண்ணா தலைமையிலான திமுக அரசு நிலச்சீர்திருத்தச் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துகிறது. கலைஞர் அதை இன்னும் தீவிரமாக்குகிறார். பெருவாரியான மக்கள் நில உடமையாளர்களாக மாறுகின்றனர்.
கலைஞர் தலைமையிலான அரசில், மாவட்டம் தோறும் பல கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இடஒதுக்கீடு முறைப்படி தீவிரமாக செயல்படுத்தப் படுகிறது.எனவே, பெருவாரியான மக்கள் படிக்கின்றனர்.
மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகிறது. மக்கள் நலமுடன் இருக்கின்றனர்.
மாவட்டம் தோறும் தொழிற்பூங்காக்கள் நிறுவுகிறார். மக்கள் வேலைக்கு செல்கின்றனர்.
ஓரளவு மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.
அடுத்து பெண்கள் படிக்க ஊக்கமளிக்கப் படுகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுகிறது. பெண்களின் அரசியல் பங்கெடுப்பு ஊக்கமளிக்கப் படுகிறது.
படிப்பறிவுடன் ஆங்கில அறிவும் இருந்ததால், புதிய பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட வளர்ச்சியை முறையாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
இப்படி,
ஆண்கள், பெண்கள், உயர்சாதி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், நகரத்தில் வாழ்பவர்கள், கிராமங்களில் வாழ்பவர்கள் என்று எல்லோரிடத்திலும் வாங்கும் சக்தி பரவலாக்கப் படுகிறது. சமூகநீதியை கடைபிடித்ததால், மக்களிடையே சமத்துவம் நிலவுகிறது.
விவசாயத்துறை, உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் அதிகமாக நிறுவப்படுகிறது. கட்டுமானத்துறை வளர்ச்சியடைகிறது.
இப்படி திராவிட தலைவர்களால் பார்த்து பார்த்து உருவாக்கிய தமிழ்நாட்டில்,
இந்த மாநிலத்திற்கு சம்பந்தமே இல்லாத பிஹாரை சேர்ந்த எச். ராஜா, கேரளாவைச் சேர்ந்த சீமான் போன்றவர்கள் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக பழகும் நமக்குள் (திராவிட, இஸ்லாமிய, கிறித்துவ மக்கள்) பிரிவினையை தூண்டும் விதமாக பேசித் திரிகின்றனர்.
கும்பகோணம் அருகே, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையில் நடந்த தகராறில் ஒருவர் இறந்துவிட, அதனை மதக்கலவரமாக்கத் துடித்த RSS/ பாஜக கும்பல், பொள்ளாச்சி சம்பவத்தில் வாய் திறக்கவே இல்லை.
மேலும் கடந்த ஆண்டு எச். ராஜா செங்கோட்டை பகுதிகளில் மதக் கலவரத்தை தூண்டியதோடு மட்டும் இல்லாமல்,
ஓ இந்து சமுதாயமே, இஸ்லாமியர்கள் கடைகளில் எதையும் வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தார்.
இப்பொழுது ஓ, இந்து சொந்தங்களே, காரப்பன் சில்க்ஸில் துணிகளை வாங்காதீர்கள் என்கிறார்.
நாளை......???!!!
அப்படி என்றால், அங்கே வேலை பார்ப்பவர்களின் நிலை!!!!????
கிராமத்தில்,
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்க வந்தது என்று கூறுவார்கள்.
அதேபோன்று,
முதலில் இஸ்லாமியர்கள் நமது விரோதி என்றார்,
அடுத்து கிறித்துவர் நமது விரோதி என்றார்,
இப்பொழுது ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் நமது விரோதி என்கிறார்.
நாளை........!!!!!????
எச் ராஜா, சீமான் போன்ற RSS, சங்க பரிவார், தமிழ் தேசிய இயக்கங்களின் நோக்கம் ஒன்றுதான்.
இந்துத்துவா கொள்கைகளான சாதி, மதங்களை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைப்பது மட்டுமே.
கடைசியில், பணியா கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்து நம்மை அடிமைப்படுத்தி விடுவார்கள்.
கீழடி ஆய்வறிக்கைக்குப் பிறகும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால்.....!!!
நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக