வெள்ளி, 30 அக்டோபர், 2020

சக மனிதனை நாம் ஏன் மதிப்பதில்லை? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது...

Kathir RS : · கேள்வி: சக மனிதனை நாம் ஏன் மதிப்பதில்லை? அல்லது சக மனிதனை மதிக்க நாம் ஏன் காரணங்களைத் தேடுகிறோம்..? 

பதில்: நமது மரபில் அல்லது மரபணுவில் உறைந்து போன ஒரு கீழான கொள்கையே இதற்கு காரணம். இழிவான தீண்டத் தகாத மனிதர்களும் புனிதமான பூசிக்க வேண்டிய மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்தை எல்லோர் மனதிலும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் அழுத்தமாக விதைத்து வளர்த்தது மனுதர்மம் எனும் நஞ்சு.

அதை தொடர்ந்து பிற வேத இதிகாசங்களும் பல ஆயிரம் வருடங்களுக்கு இவற்றை உறுதி செய்து கொண்டே இருந்தன.
மனித இனத்திற்கு எதிரான இந்த சமூக சீர்கேட்டை எதிர்த்த போராளிகள் புத்தர் தொடங்கி பெரியார் வரை தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தாலும் இந்த இந்த நச்சுத்தன்மையை மனிதனின் மனத்திலிருந்து முழுவமுமாக நீக்க முடியவில்லை.
ஊறுகாய் ஜாடியை எத்தனைதான் கழுவினாலும் ஊறுகாய் நெடி போவதில்லையே அதைப்போல.
மனிதர்களில் இழிவானவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நாம் அவமதிக்கலாம் ஆதிக்கம் செய்யலாம் ஒடுக்கலாம் என்ற எண்ணம் இந்திய சமூகத்தின் மனங்களில் படிந்திருக்கும் ஒரு நிரந்தரமான நச்சுத்தன்மை.
இதில் பாதிக்கப்படும் மனிதனுக்கும் கூட இதே நச்சுத்தன்மை உண்டு.அவன் கொஞ்சம் மேலெழும் போது அவனை விட சற்று கீழான மனிதனிடம் இதே நச்சுத்தன்மையை காட்டுவான்.
ஆக இந்த நச்சு மரத்தின் வேரை பிடுங்காமல் இதன் கிளைகளை வெட்டி பயனில்லை.
தொடக்கப் புள்ளியை அழிக்காமால் வைத்து வணங்கி கொண்டே இந்த மன நிலையை மாற்ற முடியாது.
மனுதர்மம் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கும் முட்டாள்களுக்கு இது தெரிவதில்லை.
மலத்தை ஃப்ளஷ் செய்யாமல் டாய்லட்டை மூடி வைத்துவிட்டு..
நாம் அந்த டாய்லட்டை பயன்படுத்துவதில்லையே..புதிய மாடர்ன் டாய்லட்டைத் தானே பயன் படுத்துகிறோம்..அந்த பழைய டாய்லட்டை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
கேள்விக்கான நேரடி பதில் இதுதான்..
அறிமுகமில்லாத மனிதனைக்கூட அவன் தோற்றத்தை வைத்து இவன் அவனாக இருப்பானோ என்ற எண்ணத்துடன் பொருத்திப் பார்த்து அவமதிக்கும் இழிவாக நடத்தும் குணமும்
தோற்றம் உடுப்புகள் இவற்றைப் பார்த்து இவன் அவனாக இருக்க மாட்டான் என நினைத்து மதிக்கும் குணமும்
மனு என்ற மனித குல எதிரியால் தான் இந்த மண்ணில் உருவாக்கப்பட்டது.அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது.
கதிர் ஆர்எஸ்
30/10/20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக