திங்கள், 19 அக்டோபர், 2020

இலங்கை மலையக மக்கள் பற்றிய சில குறிப்புக்கள்

மலையக மக்களை தோட்டக்காட்டான் என்று தமிழகத்தில் இன்னும் குறிப்பிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதால்  இது பற்றி ஒரு தெளிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன் 

மலையக மக்கள் என்ற பெயரில்தான் குறிப்பிடுவார்கள்  மேற்படி சொல் சுமார் பல  ஆண்டுகளுக்கு முன்பே ஓரளவு  மறைந்து விட்டது என்றெண்ணுகிறேன்..     மேலும் வடக்கு கிழக்கில் மலையக மக்கள் முன்னணி வரும் தேர்தல்களின் போட்டியிட இருக்கிறது . கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் போன்ற பகுதிகளில் மலையக மக்களின் வாக்குவங்கி பெருமளவு அதிகரித்து அவர்கள் எம்பிக்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் பெறக்கூடிய நிச்சயமான வாய்ப்பு தற்போது உள்ளது .ஏற்கனவே பல உள்ளூராட்சி சபைகளில் இந்த வடமாவட்டங்களில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களில் அவர்கள் பிரதிநிதியாக உள்ளார்கள் .

இளைய தலைமுறையினர் பலருக்கும் இந்த வார்த்தையே தெரியாது .இலங்கையின் எந்த ஊடகங்களிலும் சரி முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் சரி இந்த வார்த்தை இடம் பெறுவதில்லை  . இந்த வார்த்தையை மீளுருவாக்கம் செய்வது முழு மலையக மக்களையும் நோகடிக்க செய்யும் என்றெண்ணுகிறேன் . மேலும் சுமார் இருப்பது இலட்ச்சத்தையும் தாண்டிய மலையக மக்களில் தோட்டங்களில் வேலை செய்வோர்கள் மிகவும் அருகிவிட்டது . சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் மட்டுமே தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்  

மேலும் ஸ்ரீ மா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தமிழகம் திரும்பிய மக்கள் தொகை தற்போது சுமார் முப்பது இலட்ச்சம் இருக்கும் என்று எண்ணுகிறேன் . இவர்களையும் கூட இன்னும் சிலோன் காரன் என்று உள்ளூர் மக்கள் கூறுவதாக அவர்களில் சிலர் என்னிடம் வேதனையோடு கூறிய விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். 

ஆர் ராசாவின் தந்தை கூட மலையகத்தில் பிறந்தவர்தான் . ஆனால் அவர்கூட அதுபற்றி பெரிதாக பேசுவதில்லை . அவரையும்கூட சிலோன்காரன் என்று எதிர்க்கட்சிகள் கூறிவிடக்கூடும்?

ஈழம் என்றால் பிரபாகரன் என்று கருதிக்கொண்டது மிகவும் தவறாகும் . தமிழக ஈழ ஆதரவாளர்கள் பெரிதும் வடக்கு புலிகளின் ஆதரவாளர்கள்தான் . இவர்களை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு முழு இலங்கைக்கும் எதிரான ஒரு மனோ நிலை கட்டமைக்க முயல்கிறார்கள் .  

அது இருபக்கமும் கூர் உள்ள ஒரு ஆயுதம் என்பதை சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறேன் .

தமிழர்களில் பார்ப்பனீயம் விதைத்த ஜாதிய மனப்பான்மையின் வெளிப்பாடுதான் அவன் அது இவன் இது என்று சக மனிதர்களை புறந்தள்ளி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது. 

ஜாதீயம் மட்டுமல்ல தமிழக மாவட்டங்களிலேயே அவன் கோவைக்காரன் அப்படித்தான் இவன் மதுரைக்காரன் அவன் ராமநாதபுரம் இப்படி மக்களை பொதுமை படுத்தி தரம் பிரித்து சமூக உறவுகளை சீர்குலைக்கும் தன்மை இன்னும் இருக்கிறது . 

கிளிமூக்கு அரக்கர் கோஷ்டியின் அகதி நாய்கள் என்ற சொல்லும் இந்த வகையறாதான். 

உலகம் முழுவதும் அகதிகள்  இருக்கிறார்கள் . அகதி என்றால் அது எதோ இலங்கை தமிழர்கள் மட்டும்தான் என்று கருதுகிறார்கள்.

பலரும் அறியாத ஒரு செய்தியை இங்கு கூறவேண்டும் .இலங்கையர்களை விட இந்தியர்கள்தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் அகதி அந்தஸ்து கோரி இருக்கிறார்கள்  பலருக்கு காலப்போக்கில் அவை வழங்கப்படும் இருக்கிறது . 

இப்போதும் கூட பல தமிழகத்தவர்கள் அகதி அந்தஸ்து கோரி அவர்களின் கோப்புக்கள் அரசுகளிடம் தூங்குகிறது . காலப்போக்கில் அநேகருக்கு மனிதாபிமான அடிப்படையில் அவை வழங்கப்பட்டும்  உள்ளது . சிலர் திருப்பி அனுப்பட்டுவதும் நடக்கிறது .. சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி பேசுவதில்லை.  

 இந்தியாவில் இருந்து வந்து அகதி அந்தஸ்த்து கோருவோர்கள் தங்கள் ஊர் அடையாளங்களை  மறைத்து வாழ்கிறார்கள்  

இதன்காரணமாக இவர்களை பற்றிய செய்திகள் இவர்களின் ஊர் மக்களுக்கே பெரிதாக தெரிவதில்லை 

இது மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக இந்திய மக்களுக்கும் உள்ள வித்தியாசம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக